கேட்டான்.
"எங்க வீடு எப்படி இருந்ததுன்னு நீங்களே பார்த்தீங்க இன்ஸ்பெக்டர். வேற என்னன்னு நான் நினைக்க முடியும்?" என்றான் முத்துக்குமார் சோகமாக.
"ஏன் உங்க தொழில் எதிரிகள் யாராவது இதை செய்திருக்க கூடாதா? உங்க மெடிசின் ஃபார்முலா எல்லாம் ரொம்ப ரகசியமானது. இந்த ஃபீல்டில் எதிரிங்க வருவதும் ரொம்ப சுலபம். நீங்களே இதை சொல்லி இருக்கீங்க."
முத்துக்குமாரின் முகத்தில் குழப்பமும் யோசனையும் தெரிந்தது.
"ஓ! எனக்கு இதுவரைக்கும் அப்படி ஒரு எண்ணம் வரவே இல்லை!" என்றான்.
"உங்களுக்கு அது போல எதிரிங்க யாராவது இருக்காங்களா?"
"எதிரின்னு சொல்ல முடியாது ஆனால் எல்லா தொழிலையும் போல இதிலேயும் போட்டி பொறாமை நிறைய இருக்கு. குறிப்பா சேவ் யூ கம்பெனி ஓனர் சுபேஷ் நாங்க இப்போ ரிசெர்ச் செஞ்சுட்டு இருக்கும் அதே மருந்தை கண்டுபிடிக்க ரிசெர்ச் செஞ்சுட்டு இருக்கார். எங்க மெடிசின் ஃபைனல் ஸ்டேஜில் இருப்பதை தெரிஞ்சு அவர் இல்லீகல் வழியில் அந்த ஃபார்முலாவை திருட முயற்சிப்பதா தெரிஞ்சது. அதுக்காக தான் நான் மெயினா எங்க கம்பெனியில் செக்யுரிட்டி அதிகப் படுத்தியதே."
"ஓகே... அவர் அந்த ஃபார்முலா உங்க வீட்டில் இருக்கலாம்னு நினைக்க சான்ஸ் இருக்கா?"
"யெஸ் இன்ஸ்பெக்டர்! என்னோட ஸ்டாஃப் ஒருத்தருக்கு பணம் கொடுத்து அந்த ஃபார்முலா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க அவர் முயற்சி செய்துட்டு இருந்தார். அதை கண்டுப்பிடிச்சு நான் அந்த பர்சனை டிஸ்மிஸ் செய்துட்டேன். ஆனால் அந்த நேரத்தில் அந்த ஃபார்முலா பேப்பர் எங்க ஆஃபீஸ் சேஃப்ட்டி லாக்கரில் இருந்தது."
"அப்போ இப்போ அங்கே இல்லையா?"