அபிநயாவோ டிபன் வேலையை முடித்து விட்டு சமையல் அறையை விட்டு வெளியே வர அவளை பின்தொடர்ந்து வரிசையாக ரயில் பெட்டி போல அந்த 9 பேய் குழந்தைகளும் அணிவகுத்து வந்தன, அவள் எந்த பக்கம் சென்றாலும் அந்த வழியே சென்றன
”விக்ராந்த் ஏன் இன்னும் வரலை, ம் என்ன செய்யலாம் இப்ப, அவர்கூட டிபன் சாப்பிடலாம் ஆனா இப்ப போர் அடிக்குதே” என யோசித்தபடியே தனது செல்போனை எடுத்துப் பார்த்தாள்
ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று எதுவும் இல்லை, தனது தோழிகளிடம் இருந்து கூட எதுவும் வரவில்லையே என்ற ஆதங்கத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள், அவளை பின்தொடர்ந்து அந்த 9 குழந்தைகளும் நடந்தன, அதில் சிலது தங்களுக்குள் இடித்துக் கொண்டு விழுந்து எழுந்து என நடந்தன.
”யாருமே எனக்கு மெசேஜ் பண்ணலை, அப்படின்னா என் மேல யாருக்குமே அக்கறையில்லையா இருக்கட்டும் இருக்கட்டும், ஊர்ல இருக்கறப்பதான் அப்பா யூ-ட்யூப்க்கு வீடியோ எடுக்க அனுமதிக்கலை, இங்கதான் அப்பா இல்லையே, நாம வீடியோ எடுத்து அப்லோடு செய்யலாமே, ஐ ஜாலி, இனி எதுக்கு தாமதம், உடனே களத்தில இறங்கலாம்” என உற்சாகமாக சொல்லிக்கொண்டு நின்ற இடத்திலேயே ஒரு குதி குதிக்க அவள் செய்தது போலவே 9 பேய் குழந்தைகளும் குதித்தன. அதோடு அபியும் தனது அறைக்கு துள்ளிக் கொண்டு ஓட அவளைப் போலவே குழந்தைகளும் துள்ளிக் கொண்டு ஓடின.
தனது லக்கேஜ் பையில் இருந்து கேமிரா ஸ்டிக், மைக், லேப்டாப் என ஒவ்வொன்றாக எடுத்து படுக்கையில் பரத்தி வைக்க அந்த படுக்கையில் அந்த 9 பேய் குழந்தைகளும் அமர்ந்து அபி வைத்த பொருட்களை எல்லாம் மலங்க மலங்க பார்த்தன, அவைகளுக்கு என்ன தெரியும் 30 வருடத்திற்கு முன் இந்த பொருட்கள் ஏது, அவைகள் வாழ்ந்தபோது டிவிதான் பிரதானமே.
அபியும் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு
”ஓகே இப்ப வீடியோ எடுக்கலாம்” என சொல்லியவள் உடனே கண்ணாடி முன் நின்று தன்னை ஒப்பனை செய்துக் கொண்டாள்
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.