(Reading time: 8 - 15 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 23 - நவ்யா

உமேஷின் மனம் பதை பதைப்பதை புரிந்தோ புரியாமலோ, ஜனனி சிரித்தாள்!

   

உமேஷிற்கு ஏமாற்றமாக தான் இருந்தது. ஆனால் வெள்ளிச் சலங்கைகள் போல ஒலித்த அவளின் சிரிப்பு அந்த ஏமாற்றத்தைக் குறைத்தது.

   

“நாளைக்கு நாம காஃபி ஷாப் போறது நான் சொன்ன எந்த கேட்டகரிலேயும் கிடையாது உம்மிஷ். பர்த்டேக்கு ஓசி கேக் சாப்பிட போற கேட்டகரில தான் சேர்க்கனும்!”

   

ஜனனி சொல்லி விட்டு மீண்டும் சிரிக்க உமேஷின் முகத்திலும் குறுநகை அரும்பியது.

   

“எல்லோரையும் லவ் பண்ண வைக்குறேன்னு சொல்ற, ஆனால் நீ ஃப்ரென்ட்ன்னு கூட சொல்ல மாட்ட?”

   

“ஃப்ரென்ட்னா ஃப்ரென்ட்ன்னு சொல்லலாம் உம்மிஷ். இந்த மொக்கையை ஸ்டாப் செய். நாளைக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் தாராளமா எடுத்துட்டு வா. நான் காலையில இருந்து சாப்பிடாம வருவேன்! பை பை!”

   

ஜனனி அழைப்பை துண்டித்தப் பிறகும் உமேஷ் போனை காதில் இருந்து விலக்காமலே வைத்திருந்தான்.

   

அவனையும் ஜனனியும் இணைக்கும் ஒரே கருவி அந்த மொபைல் மட்டும் தான்.

   

அவனுக்கு ஜனனி மேலே வந்திருக்கும் ஆர்வம் எந்த விதமானது என்று உமேஷால் எளிதாக இனம் பிரிக்க முடியவில்லை.

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.