எங்கே அவனை முழுவதுமாக வெறுத்துவிடுவாளோ என்று கூட மஞ்சுவிற்கு பயம் ஏற்பட்டு இருந்தது!
ஆனால் மனோஜின் மனநிலையை அவள் புரிந்துக் கொண்டிருந்தாள். எதனால் அவன் அப்படி நடந்துக் கொள்கிறான் என்பதையும் அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அதனால் தான் அவனுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருக்காமல், அவனின் வேலைத் தொடர்பான பிரச்சனை ஒரு முடிவுக்கு வரட்டும் என்று பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு மனோஜை விட்டு விலகியே இருந்தாள்.
அன்று பல நாட்களுக்குப் பிறகு மனோஜின் முகத்தில் சற்றே மலர்ச்சி இருந்தது!
“புது கம்பெனி ஒன்னுல இன்டர்வியூ அட்டென்ட் செய்தேன். அவங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். விஸா ஒன்னு தான் கேள்வி. அதுக் கூட செய்யலாம்னு சொல்லி இருக்காங்க. அப்ரூவல் வாங்கனுமாம். நெக்ஸ்ட் ஸ்டெப்ஸ் ஒன்னு இரண்டு வாரத்துல தெரியும்னு சொல்லி இருக்காங்க. இன்னும் அடுத்த லெவல் இன்டர்வியூ இருக்கும்னு நினைக்கிறேன்.”
அவள் கேட்காமலே, மனோஜ் நம்பிக்கையுடன் சொன்னப் போது மஞ்சு பெயருக்கு தலை மட்டும் அசைத்து வைத்தாள்!
அவள் மனதின் கோபம் சற்றும் குறைந்திருக்கவில்லை! அவனுக்கு யார் மீதாவது கோபம் என்றால் அவள் மீது கோபத்தைக் குப்பையாக கொட்டுவான்... அவனுக்கு மகிழ்ச்சி என்றதும் அவள் அதை எல்லாம் மறந்து ஒதுக்கி விட்டு மகிழ்ச்சி அடைய வேண்டுமா???
அதுவும் இல்லாமல் இப்போது அவன் சொல்லும் வேலையிலும் கூட அதே விசாவில் கேள்வி இருக்க தானே செய்கிறது! எதுவாக இருந்தாலும் தெளிவாக முடிவு தெரியட்டும் என்ற முடிவுடன் வாயை இறுக்க மூடிக் கொண்டு அமைதியாக இருந்தாள்!
நாள் செல்ல செல்ல, மனோஜின் முக மலர்ச்சியும் குறைந்துக் கொண்டே போனது! ஒரு வாரம் ஆனப் பிறகும் அவன் ஒன்றும் சொல்லாமல் இருக்கவும், அவன் சொன்ன