முடிஞ்சிடுச்சு. சின்ன சின்ன லாஸ்ட் மினிட் வேலை தான் இருக்கு. அது அப்புறம் கூட செஞ்சுக்கலாம். நீங்க வேலையை சீக்கிரம் முடிச்சுட்டு வாங்க... நான் போய் ரெடி ஆகுறேன்...”
நகர முயன்றவளின் தோள் பற்றி நிறுத்தினான் மனோஜ்!
மஞ்சு என்ன என்பதாகப் பார்க்க, மனோஜ் குனிந்து அவளின் உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டான்!
“மனோஜ்?” என்றாள் மஞ்சு சிணுங்கலாக!
“நம்ம டீல் மறந்துட்டீயா??? நீ வந்த... என்னைப் பார்த்து, ஸ்மைல் செய்த... அப்போ நான் உன்னை கிஸ் செய்யலாம்... அதான் நம்ம அக்ரீட் டீல்!!!!” மனோஜின் குரலில் உல்லாசம் நிறைந்திருந்தது!
அதை ரசித்துக் கொண்டே,
“ஹ்க்கும்! நான் ஒன்னும் அந்த டீலை ஒத்துக்கலை... இன்னைக்கு கெட் டுகெதர் முடியட்டும்... உங்களோட இந்த ஒன் சைடட் டீல் பத்தி நான் பேசியே ஆகனும்...” என்றாள் மஞ்சு!
“பேசனுமா? இன்னைக்கு நைட்டா??? ஹுஹும்... ஹுஹும்...”
அவளின் காது மடல்களை விரல்களால் வருடிக் கொண்டே காதலுடன் மனோஜ் கேட்கவும், மஞ்சு சிலிர்த்து அவனின் கையை விலக்கினாள்!
தடுக்காமல் கைகளை எடுத்துக் கொண்டவன், மீண்டும் அவளின் உதடுகளில் இன்னும் அதிக அழுத்தத்துடன் முத்தமிட்டான்.
இந்த முறை கண்களாலேயே மஞ்சு சிணுங்கவும்,
“இது எனக்கான எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் ஃப்ரீ டீல்...” என்று சொல்லி சிரித்தான் மனோஜ்...