தொடர்கதை - இன்ஸ்பெக்டர் தேன் - 08 - தேன்மொழி
கேஸ் ஃபைல் - 02 - குற்றம் புரிந்தவர்... !
"சத்யா, ப்ரேக்பாஸ்ட் லேட் ஆகும்னா நான் கிளம்புறேன். டி.எஸ்.பி பார்க்க ஆபிஸ் போகனும். லேட்டா போக முடியாது!"
சமையலறையில் கேஸ் அடுப்பின் முன் நின்றிருந்தாலும் வேறு ஏதோ சிந்தனையில் இருந்த சத்யா, கணவனின் குரலில் சிந்தனை கலைந்து,
"எல்லாம் ரெடி ஆச்சுங்க, நீங்க சாப்பிட வாங்க" என்று அவனை அழைத்தாள்.
தென்றல்வாணன் உணவு மேஜைக்கு வந்து அமரவும், கணவனுக்கு உணவை பரிமாறிய படி,
"என்ன இன்னைக்கு டி.எஸ்.பி பார்க்க போறீங்க?" என தன் கேள்வி கணையை தொடங்கினாள் சத்யா.
அவளை நேராக பார்க்காமல்,
"இந்த ஜுரிஸ்டிக்ஷன் கேஸ் ஒன்னு வேற ஒரு ஆபிசருக்கிட்ட ஹாண்டில் ஓவர் செய்யனும்," என்றான் தேன் மொட்டையாக.
"ஏன், உங்க கிட்ட கொடுக்காமல் வேற ஒருத்தர் கிட்ட கொடுக்குறாங்க???"
"விடு சத்யா, இதெல்லாம் வேலை விஷயம். நான் உன் கிட்ட டிஸ்கஸ் செய்ய முடியாது!"
சத்யா அவனை முறைத்து பார்த்து விட்டு, சமையறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
கண்டுக்கொள்ளாமல் சாப்பிடும் வேலையை தொடர்ந்த தேன், ஒரு சில நிமிடங்கள் கழித்து,
"உனக்கு உடம்பு ஏதாவது சரி இல்லையா?" என பேச்சை மீண்டும் துவங்கினான்.