(Reading time: 7 - 13 minutes)
Inspector Then
Inspector Then

"அப்பா! சந்தோஷம்!"

  

அவசர அவசரமாக கை கழுவிய தேன், தன் காக்கி சட்டை யூனிபார்மை அணிந்துக் கொண்டு, வேகமாக கிளம்பினான்.

  

"ஓகே சத்யா நான் கிளம்புறேன். இப்போவே லேட் ஆச்சு!"

  

"சரி, பார்த்து போங்க! போன் எடுத்துக்கிட்டீங்களா?"

  

"அடடா மறந்தே போயிட்டேன்."

  

அவசர அவசரமாக அவன் தன் செல்போனை தேட அது அவன் கண்ணில் சிக்காமல் விளையாடியது.

  

"இங்கே எங்கேயோ தான வச்சேன்?"

  

அவன் தேடுவதை கவனித்து அங்கே வந்த சத்யா,

  

"அந்த டேபிள்ள பார்த்தீங்களா? அங்கே தான் நேத்து பார்த்தேன்," என்றாள்.

  

போன் அவள் சொன்ன இடத்திலேயே தான் இருந்தது!

  

"தேங்க்ஸ் சத்யா! நான் கிளம்புறேன்! ஐயோ, என் போன்ல சார்ஜே இல்லையே! சத்யா உன் போன் எடுத்துட்டு போறேன், வீட்டில லேன்ட்லைன் இருக்கே இன்னைக்கு ஒரு நாள் மேனேஜ் செய்துக்கோ,"

  

"சரி, வேற வழி என்ன?"

  

"இன்னைக்கு ஒரே ஒரு நாள் மட்டும் தான் சத்யா. அப்புறம் இன்னைக்கு டின்னருக்கு எக்ஸ்ட்ராவா ஒருத்தருக்கு சேர்த்து குக் செய்து வை. நான் ஒரு கெஸ்ட்டோட வருவேன்."

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.