(Reading time: 7 - 13 minutes)
Inspector Then
Inspector Then

  

"நீங்க இரண்டு பேரும் ஃபிரெண்ட்ஸ் என்பது எனக்கும் தெரியும். ஆனாலும் தேன்..."

  

"சார், நான் எனக்குன்னு சில பாலிசி வச்சிருக்கேன். இந்த கேசை நான் எடுத்து நடத்தினால், சரியா வராது. என்னால முடிஞ்ச அளவுக்கு எல்லா உதவியையும் வினோதனுக்கு செய்றேன்."

  

"ஓகே! நான் வேற என்ன சொல்ல?” என்றார் டி.எஸ்.பி வருத்தத்துடன்.

  

“வினோதன், இங்கே தான் இருக்கார் சார். நான் அவரை வர சொல்லட்டுமா? நீங்களே கேஸ் பைலை அவர் கிட்ட கொடுத்ததுப் போல இருக்கும்?

 

“வர சொல்லுங்க!”

 

தென்றல்வாணன் அறையின் வெளியே நிண்டிருந்த வினோதனை அழைத்து, கை ஜாடையால் உள்ளே வர சொன்னான்.

 

வினோதனும் டி.எஸ்.பி முன் நின்று சல்யூட் அடித்தான்.

 

“குட் மார்னிங் சார்!”

 

“மார்னிங் வினோதன்! தேன் இந்த கேஸை ஹாண்டில் செய்யாம உங்க கிட்ட கொடுக்க சொல்லி இருக்கார். நார்மலா இதை நான் அலோ செய்ய மாட்டேன். பட் திஸ் ஒன் டைம் பிளேக்ஸிபிலா அலோ செய்து இருக்கேன். நீங்க நானும் தென்றல்வாணனும் உங்க மேல வச்சிருக்க நம்பிக்கையை காப்பாத்துவீங்கன்னு நம்புறேன். ஆல் தி பெஸ்ட் வினோதன். கேஸ் டீடைல்ஸ் எல்லாம் இந்த பைல்ல இருக்கு. ஸ்டேட் லெவல் தாண்டி பார்லிமென்ட் வரைக்கும் கூட இந்த கேஸ் பத்தி பேச்சு அடிப் படுது. ஸோ ரொம்ப கேர்ஃபுல்லா ஹாண்டில் செய்ங்க"

  

"ஓகே சார்! அன்ட் தாங்க்ஸ் பார் யுவர் விஷஸ் சார்!" என்ற வினோதன், டி.எஸ்.பி கொடுத்த பைலை கையில் வாங்கிக் கொண்டான்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.