ஈஸ்வரனை கண்டதும் தேன்மொழி வாயடைத்துப் போய் தள்ளி நிற்க அவளை ஏளனமாக பார்த்துவிட்டு கதிரேசனிடம் வந்தவர்
”நீயெல்லாம் ஒரு ஆளா, பொண்ணை ஒழுங்கா நல்லபடியா வளர்க்க துப்பில்லை, அன்னிக்கு என் கால்ல வந்து விழுந்த, நான் விரட்டவும் வெட்கமேயில்லாம என் மாப்பிள்ளை கால்ல வந்து விழறியே அசிங்கமாயில்லை” என ஈஸ்வரன் சொல்ல இளாவோ அவர் பேசிய அனைத்தையும் விட்டுவிட்டு மாப்பிள்ளை என்பதை மட்டும் காதில் வாங்கிக்கொண்டு அவரிடம்
”மாப்பிள்ளையா அது யாரு” என கேட்க
”நீதான் மாப்பிள்ளை” என இளாவை கைகாட்டினார் ஈஸ்வரன். அதைக்கேட்டு உரக்க சிரித்தான் இளா
”இவ்ளோ நேரம் இந்த 2 பேரும் ட்ராமா பண்ணாங்க அடுத்து நீங்களா, நடத்துங்க நடத்துங்க ஆனா அதை எல்லாம் கேக்கற நிலையில நான் இல்லை, வீட்டை விட்டு வெளியே போங்க எனக்கு மாயாவதியும் வேணாம் தேன்மொழியும் வேணாம்” என சொல்ல ஈஸ்வரனோ உடனே தாத்தாவிடம் வந்தார்
”மாமா உங்க பொண்ணு சாகறப்ப கேட்ட வாக்கு மறந்துட்டீங்களா” என கேட்க
”மறக்கலை அவள் சொன்னது 2 பேரன்ங்கள்ல ஒருத்தனை மாயாக்கு தரசொல்லி, ஏற்கனவே மாயா ஜெயந்தனை காதலிச்சி ஊரறிய சுத்தினது தெரியும்ல, அப்புறம் எதுக்காக இளாவை மாப்பிள்ளைன்னு கைகாட்டறீங்க, உங்க மாப்பிள்ளை இவன் இல்லை, பஞ்சாயத்து தீர்ப்பு மறந்து போச்சா ஜெய்க்கு இன்னும் கல்யாணம் ஆகலை அங்க போய் பேசுங்க”
“ஜெய் ஒரு மனுசனே கிடையாது, அவனுக்கு என் பொண்ணை நான் தரமாட்டேன்னு நான் பஞ்சாயத்துல சொல்லிட்டேன், ஜெயந்தன் என் பொண்ணு மாயாவை ஏதோ வசியம் பண்ணிட்டான். அதனாலதான் மாயா பஞ்சாயத்தில பேசி தனக்கேற்ப தீர்ப்பை வாங்கிக்கிட்டா ஆனா தீர்ப்பின் படி ஜெய்தான் கல்யாணம் செஞ்சிக்க மறுத்துட்டு அப்பவே வெளிநடப்பு
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.