(Reading time: 6 - 11 minutes)
Inspector Then
Inspector Then

ரூபா கிட்டேயும் சொல்லு, சரியா?” என்று விஜயாவிடம் சொன்னார் ராஜசுலோச்சனா.

  

சரிம்மா! என்றாள் விஜயா பணிவாக.

  

மீண்டும் தேன், வினோதனை பார்த்த ராஜசுலோச்சனா,

   

நீங்க போய் சாப்பிட்டுட்டு, அவங்களை விசாரிச்சுட்டு வாங்க... என்றார்.

  

மேடம், ஒரு சின்ன கேள்வி. இங்கே ரோசிம்மான்னு ஒருத்தங்க இருக்காங்கன்னு சொன்னாங்களே, அவங்க கிட்டேயும் நாங்க பேசனும்...

  

ரோசி அவ பொண்ணை பார்க்க போயிருக்கா. ஒன்பது மணி போல வந்திருவா, நீங்க எங்க கிட்ட பேச வரும் போது அவளும் இருப்பா.

  

தேங்க்ஸ் மேடம்.

  

தேனும், வினோதனும் விஜயாவை தொடர்ந்து உள்ளே சென்றார்கள்.

  

வாவ் தேன்! ராஜா பரம்பரைன்னு சொல்றது தப்பே இல்லை! ராஜசுலோச்சனா பார்த்தீயா, என்ன ஒரு கம்பீரம் ஆனாலும் என்ன ஒரு சிம்பிளான லுக்...

  

வினோதன், கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...!

  

வாட்!

  

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். பார்க்குறதை வச்சு ஒரு முடிவுக்கு வராமல் மைண்டை கிளீயரா வை...

  

ம்ம்ம்...

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.