(Reading time: 6 - 11 minutes)
Inspector Then
Inspector Then

சேவைகள், இன்னும் பல சமுக சேவைகள் பற்றி எல்லாம் கேள்வி பட்டது மிகை இல்லை என்றே தோன்றியது.

  

வணக்கம்மா...என்றான் வினோதன் அவனையும் அறியாமல் சற்றே பயபக்தியுடன்.

  

வணக்கம்... காலையிலேயே வந்திருக்கீங்க ஏதாவது சாப்பிட்டீங்களான்னு தெரியலை... முதல்ல சாப்பிடுங்க அப்புறம் விசாரிக்கலாம், என்றார் ராஜசுலோச்சனா மென்மையாக.

  

இல்லைம்மா... என வினோதன் மறுப்பதை தடுத்து,

  

இது உங்களுக்குன்னு சொல்றது இல்லை, எங்க குடும்பத்துல எப்போதும் இருக்க பழக்கம்.என்ற ராஜசுலோச்சனா, உள்ளே பார்த்து,

  

விஜயா, விஜயா!என்று அழைத்தாள்.

  

அடுத்த வினாடி, நாற்பது வயது மதிக்க தக்க பெண் ஒருத்தி அங்கே வந்து நின்றாள்.

  

சொல்லுங்கம்மா!குரலில் அத்தனை விசுவாசம்! அன்பு! பக்தி!

  

இவங்களுக்கு டிஃபன் கொடு விஜயா...

  

சரிம்மா...

  

என்னோட பொண்ணும் மருமகனும் இன்னும் அவங்க ரூம்ல இருந்து கீழே வரலை. நீங்க சாப்பிட்டுட்டு வேலை செய்றவங்க கிட்ட வேண்டிய விசாரணையை முடிச்சிட்டு வாங்க, எங்க எல்லோர் கிட்டேயும் பேச சரியா இருக்கும், என ராஜாசுலோச்சனாவே அவர்களுக்கான திட்டம் போட்டுக் கொடுத்தார்

  

சரிம்மா...! என இப்போதும் பயபக்தியுடன் ஏற்றுக் கொண்டான் வினோதன்.

  

விஜயா, அவங்க கேட்குற கேள்விக்கு எல்லாம் நல்ல விதமா பதில் சொல்லனும்... வேணி,

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.