இளஞ்சேரனின் மனது அல்லாடியது. அவனது கவனம் முழுவதும் மித்ரவிந்தாவின் போக்கிலே இருந்தது. அவள் ஸ்ரீதருடன் பேசியது இயல்பாக இருந்தாலும் ஏனோ ஸ்ரீதரை நினைத்து சிறிது கலக்கம் அடைந்தான். அதன் காரணமாக அவர்கள் பேசுவதையே எட்ட நின்று பார்த்துக் கொண்டிருந்தவன் தன்னைப் போல தனஞ்செய் கூட அவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருப்பதைக்கண்டு அதிர்ந்தான்.
”இத்தனை நாள் ஆகி எனக்கே இங்க அவள் மனசுல வாய்ப்பு கிடைக்கலை, அதுக்குள்ள 2 பேரா, ஒருத்தன் டாக்டர் இன்னொருத்தனைப் பார்த்தாலே தெரியுது கோட்டு சூட்டுன்னு எப்படியும் பெரிய தொழிலதிபராதான் இருக்கனும், மித்ரா என்ன யோசிப்பாள்ன்னு தெரியலையே, அவள் மனசுல நான்தான் இருக்கேன்னு என்னோட உள் மனசு சொல்லுது
ஆனா, என்னை விரட்டறதுக்காக இவனுங்களோட உதவி நாடுவாளோன்னு பயமாவும் இருக்கே, ம் என்ன செய்யலாம், எப்படியும் இங்க 2 நாள்ல கலவரம் முடிஞ்சிடும், அதுக்கப்புறம் இவளை இழுத்துக் கிட்டு ஊருக்கு போயிடனும், அவள் கத்தினாலும் சரி கதறினாலும் சரி இந்த முறை அவளை விடறதாயில்லை” என வில்லனை போல யோசித்த இளாவிடம் வந்தார்கள் கல்லூரி பெண்களான ஷாலினி மற்றும் சாம்பவி
”ஹாய்” என்றாள் ஒருத்தி அவளைப் பார்த்தான்
”ஹாய்” என்றான் மென்மையாக சிரித்தபடியே
”நீங்க சென்னையா” என கன்னட வாடையுடன் தமிழ் பேசி வைத்தாள் ஷாலினி. அவனும்
”இல்ல சிவகங்கை”
“உங்களை இதுக்கு முன்னாடி எங்கயோ பார்த்திருக்கேனே” என்றாள் சாம்பவி ஆங்கிலத்தில்
”பார்த்திருக்கலாம் வாய்ப்பிருக்கு நான் பெங்களூர்ல இருக்கற ஒரு காலேஜ்ல படிச்சேன்”
“எந்த காலேஜ்” என ஆர்வமாக கேட்டாள் ஷாலினி
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.