(Reading time: 6 - 11 minutes)
Inspector Then
Inspector Then

இருவரும் ராஜசுலோச்சனா பங்களாவை அடைந்து டிஎஸ்பி வர காத்துக் கொண்டிருந்தார்கள்.

 

தன் காரில் டிஎஸ்பி வந்ததும் இருவரும் மரியாதைக் கொடுத்து சல்யூட் அடித்தார்கள்.

 

அவர்கள் மரியாதையை ஏற்றுக் கொண்டு தலையை அசைத்த டிஎஸ்பி, “உங்க இரண்டுப் பேர் மேல இருக்க நம்பிக்கையினால தான் முழு விபரமும் கேட்காம வரேன். ஏதாவது தப்ப போனா என்ன நடக்கும்னு நான் உங்க கிட்ட சொல்ல வேண்டாம்!” என்றார்.

 

“தெரியும் சார். நாங்க மட்டும் போய் அரெஸ்ட் செய்தா சரியா இருக்காது. டைம் எடுத்துக்கிட்டா நாங்க அரெஸ்ட் செய்ய வரதுக்கு முன் எங்க ட்ரான்ஸ்பர் ஆர்டர் வந்திரும்னும் தெரியும்.”

 

“சரி, சரி போகலாம் வாங்க!”

  

*******************

  

டிஎஸ்பி சார், என்ன இது? எத்தனை தடவை தான் எங்களை தொல்லை செய்வீங்க?” என்று எரிச்சலுடன் கேள்வி கேட்ட திலீப்பிற்கு பதில் சொல்லாமல், வினோதனையும், தேனையும் பார்த்தார் டிஎஸ்பி.

  

திலீப், வீட்டுக்கு வந்தவங்க கிட்ட இப்படியா பேசுறது?” என்று மருமகனை கடிந்துக் கொண்ட சுலோச்சனா, போலீஸிடம்,

  

உட்காருங்க ஏதாவது சாப்பிடுறீங்களா?” என்று உபசரித்தாள்.

  

நோ மேடம்! நாங்க ட்யூட்டியில் வந்திருக்கோம். ஹை ப்ரோஃபைல் அரெஸ்ட் என்பதால் தான் டிஎஸ்பி யையும் கூட அழைச்சிட்டு வந்தோம்.”

  

அரஸ்ட்டா?” யாரை அரஸ்ட் செய்யப் போறீங்க?” புரியாமல் கேட்டாள் அமிர்தா.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.