(Reading time: 6 - 11 minutes)
Inspector Then
Inspector Then

உங்களை தான் அமிர்தா! உங்க தோழி ரோஹினியை கொலை செய்து கிணத்துல வீசி தற்கொலைன்னு நாடகமாடினதுக்காக உங்களை அரெஸ்ட் செய்ய வந்திருக்கோம்.”

  

அமிர்தா அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நிற்க, திலீப் கோபத்தில் சீறினான்.

  

உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா என்ன? என்ன உளறுறீங்க?”

  

உளறலை திலீப். உண்மையை தான் சொல்றோம்.”

  

என்ன உண்மை?”

  

அமிர்தா இப்போ உங்க மனைவியா இருக்கலாம். ஆனால் மூணு வருஷத்துக்கு முன்னாடி அவங்களுக்கு வேற ஒருத்தரோட தொடர்பு இருந்தது...”

  

ஹேய்... ஸ்டாப் இட்...” என்று கத்திக் கொண்டே வினோதனின் அருகே வந்தான் திலீப்!

  

வினோதன் அசரவில்லை!

 

நான் சொல்றதை முழுசா கேளுங்க திலீப். ரோஹினி கொலை நடந்த அன்னைக்கு, அமிர்தா அந்த ஆளை ரகசியமா சந்திச்சிருக்காங்க. அப்போ ரோஹினி எதிர்பாராமல் அவங்க இரண்டுப் பேரையும் பார்த்துட்டாங்க. ரோஹினி உண்மையை யாருக்கும் சொல்லிடக் கூடாதுன்னு தான் அமிர்தா ரோஹினியை கொலை செய்துட்டாங்க.”

  

இன்ஸ்பெக்டர், என் பொறுமைக்கு ஒரு அளவு இருக்கு. என் மனைவியை பத்தி இதுக்கு மேல தப்பா பேசினீங்க அவ்வளவு தான்!” என்று மீண்டும் மிரட்டுவதுப் போல சொன்னான் திலீப்.

  

அமிர்தா இன்னமும் திகைப்பில் இருந்து வெளி வராமல் அதிர்ந்து நின்றிருந்தாள்.

  

எங்க கிட்ட ப்ரூப் இருக்கு திலீப். ஒரிசாவில எங்க டீம் கைது செய்திருக்கும் தமிழ் தான் அன்னைக்கு அமிர்தா கூட இருந்தவர்ன்னு தெரியும்... அமிர்தா பாடி கிடைச்ச கிணத்துக்கு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.