(Reading time: 6 - 11 minutes)
Inspector Then
Inspector Then

பக்கத்துல அவங்க சந்திச்சுக்கிட்டப்போ...”

  

ஸ்டாப் இட்!” என்று கத்திய திலீப்,

  

ரோஹினி இறந்தது வீட்டுல. அப்புறம் அமிர்தாவை எப்படி அவ அந்த கிணத்து பக்கத்துல பார்த்திருக்க முடியும்? எல்லாமே புல்ஷிட் ஸ்டோரி...” என்று அலறினான்!

  

நீங்க சொல்றது உண்மையாகவே இருக்கட்டும் திலீப்! ஆனால் ரோஹினி இறந்தது வீட்டுலன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”

  

தென்றல்வாணன் அமைதியாக கேட்ட கேள்வியில் திகைத்து நின்றான் திலீப். ஆனாலும் உடனே சமாளித்துக் கொண்டு,

  

“அப்படி தான் கேஸை முன்னாடி விசாரிச்ச இன்ஸ்பெக்டர் என் கிட்ட சொன்னார்” என்றான்.

  

இல்லை திலீப். இது வரைக்கும் ஒரு தடவை கூட நடந்தது கொலைனோ அது வீட்டுல நடந்ததுனோ விசாரணையில வரலை, எந்த செய்தியிலும் வரலை. பரபரப்பா பேசப்பட்ட ‘அவர் இந்தியா’ நியூஸ் ரிப்போர்ட் கூட மர்மம்ன்னு சொல்லிச்சே தவிர வேற எதுவும் சொல்லலை... சொல்லுங்க திலீப் உங்களுக்கு எப்படி அவ்வளவு உறுதியா ரோஹினி இறந்தது வீட்டில தான்னு தெரியும்?”

  

திலீப் இப்போது பதில் சொல்லாமல் அமைதியாக நின்றான்.

  

சொல்லுங்க திலீப்!”

  

அவனிடம் அசைவில்லை.

  

அமிர்தா கணவனை கேள்வியாகப் பார்த்தாள்.

 

திலீப்! என்ன நடந்தது, உண்மையை சொல்லுங்க!

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.