தலையை குனிந்துக் கொண்டு இரண்டு கை விரல்களையும் கோர்ப்பதும் பிரிப்பதுமாக அமர்ந்திருந்தாள் அருந்ததி!
அவளையே பார்த்தப்படி இருந்த ஷிவா, மெல்ல பார்வையை திருப்பிக் கொண்டு பெருமூச்சை வெளியேற்றினான்.
"உனக்கு ரொம்ப தாராள மனசு, பெரிய தியாகம் எல்லாம் செய்ற?"
ஷிவா சொன்னதற்கான அர்த்தம் புரியாமல் நிமிர்ந்துப் பார்த்தாள் அருந்ததி!
"என்ன பார்க்குற? என்னைப் பார்த்தா உனக்கு வில்லன் போல இருக்கா? அது என்னது அது, உங்களுக்கு பிடிச்சது போலவேன்னு பேச்சு எல்லாம்...??"
அவன் அவள் சொன்னதை சொன்ன விதத்தில் அருந்ததி அமைதியாக அமர்ந்திருந்தாள்.
"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் கல்யாணத்துக்கு முன் பொண்ணுங்களை நிமிர்ந்துக் கூட பார்த்ததில்லை. இதை பெருமைக்காக சொல்லலை, என்னோட மன உறுதியை பத்தி உனக்கு சொல்ல சொல்றேன். எனக்குன்னு வரவ கிட்ட மட்டும் தான் என் மொத்த அன்பையும் கொட்டனும்னு காத்திருந்தேன்."
"ம்ம்ம்... உங்க அக்கா சொன்னாங்க."
"அதனால தான் முதல் நாள் தப்பு நடந்துப் போச்சு. நான் உனக்கு சம்மதமான்னு கேட்ருக்கனும்! ஐ ஆம் சாரி."
"என்ன நீங்க தப்புன்னு எல்லாம் சொல்லிட்டு! என்கிட்டே போய் சாரி எல்லாம் கேட்குறீங்க? உங்க மேல ஒரு தப்பும் இல்லை, எனக்கு தான்... நான் தான்..."
ஷிவா மேலே பேசாமல் அவளையே பார்த்திருந்தான்.
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.