(Reading time: 5 - 9 minutes)
Manasa Theevu
Manasa Theevu

அவளுக்கு வந்த கண்ணீரை விழுங்கிக் கொண்டு “ நானும் உங்களை மிஸ் செய்ஞ்சேன் நாயரே” என்றாள் வருத்தத்துடன் ,

  

அவனுக்கு ஓரளவு அவளுடைய வருத்தம் என்னவென்று புரிந்து, அதை அவன் தெரிந்தமாதிரி காட்டிக் கொள்ளவில்லை.

  

அவளைத் தன் தோள்மேல் சாய்த்துக் கொண்டான். அவள் அறியாமலேயே அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது... மாதவன் தன் கை முஷ்டியை இருக்கமாக வைத்து தன் கோபத்தை அடக்கிக் கொண்டான்.

  

“என்னடா, என்னை ரொம்ப மிஸ் பண்ணியா?”

  

“ம்ம்….” என்றாள்.

  

“ இனி ஒன்ன நான் எங்கேயும் தனியா அனுப்ப மாட்டேன். நான் கூடவே வருவேன்” என்று கூறி விட்டு அவளை இருக்க அணைத்துக் கொண்டான்.

  

அந்த அணைப்பில் அவன், 'நானிருக்கேன் உணக்கு, எதற்கும், யாருக்கும் கவலை பட வேண்டாம்’ என்று அவளுக்கு உணர்த்தினான்.

  

 அவளிடம், தான் அந்த தீவில் செய்யவிருக்கும் வேலைகளை கூறினான்…..

  

அவளும் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

  

அதில் ஓரளவு புரிந்தது... ஆனால், அவனிடம் மேலும் எதுவும் கேட்க மனமில்லை.

  

அவள் மனம் முழுவதும் அவள் பெற்றார்களே இருந்தார்கள்.அவனுக்கும் அது தெரியும். அவளாகவே சொல்லட்டும் என்றிருந்தான். அதுமட்டுமின்றி, அவள் மனம் படும் பாடு  அவனுக்கு தெரியும்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.