(Reading time: 4 - 8 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 43 - பிந்து வினோத்

நான் சீக்கிரம் வந்திருவேன் pbs. நீ டைமுக்கு சாப்பிடு. எந்த வேலையும் செய்யாதே. நான் வந்து எல்லாம் பார்த்துக்குறேன்.”

  

“மனோஜ், போதும், நீங்க கிளம்புங்க. என்னை நான் பார்த்துக்குறேன்!” மஞ்சு சோர்வுடன் சொன்னாள்.

  

“ஏன் இப்படி பேசுற pbs? டையர்டா இருக்கா?? டாக்டர் கிட்ட போகனுமா??”

  

மனோஜின் பரபரப்பு கலந்த கேள்வி மஞ்சுவின் முகத்தை மலர செய்யவில்லை மாறாக அவளை முறைக்க வைத்தது.

  

“என்ன? எதுக்கு முறைக்குற?” புரியாமல் கேட்டான் மனோஜ்.

  

“அரை மணி நேரமா எனக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துட்டு இருக்கீங்க... நான் டையர்ட் ஆகாம எப்படி?

  

“நீ பத்திரமா இருக்குறது முக்கியம் மஞ்சு. உனக்கு மட்டுமில்லை, நம்ம குழந்தைக்கும்.”

  

மஞ்சு கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அவனை ஒரு பார்வைப் பார்த்தாள்.

  

“எல்லாம் இந்த பாப்பாக்காக நீங்க செய்றது தானே?? இவ்வளவு நாள்ல எத்தனை தடவை இப்படி பொறுமையா உட்கார்ந்து எனக்கு பை சொல்லி இருக்கீங்க?”

  

மனோஜிடம் ஒரு ‘பாயிஷ் ஸ்மைல்’ வந்தது...

  

“உனக்கும் சேர்த்து தான் மஞ்சு... நான் உன்னை நல்லா கவனிச்சுக்கனும்னு நினைக்கிறேன், அவ்வளவு தான்!”

  

மஞ்சுவின் முகத்தில் யோசனை படர்ந்தது...

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.