(Reading time: 14 - 27 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்...  - 02 - பிந்து வினோத்

02. எந்தன் உயிரே எந்தன் உயிரே...

   

விவேக் சென்றதும் பவித்ரா தலையில் அடித்துக் கொண்டாள்!

  

"ஹே பாரு, எதுக்குடி, இப்படி வாயாடுறே... ஒரு பேச்சுக்கு சரின்னு சொல்ல வேண்டியது தானே?"

  

"என்ன பவி நீயும் அந்த ஆள் கூட சேர்ந்து கிட்டு... சரியான லூசு... இவனுக்கு எல்லாம் எப்படி தான் கிளாஸ் எடுத்தாங்களோ தெரியலை... சரி வா, நாம போகலாம்..." என்று தோழியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு திரும்பி ஸ்டாஃப் ரூம் நோக்கி நடந்தாள் பாரதி.

  

***********

  

வேகமான நடையுடன் கல்லூரி முதலவர் அறையை அடைந்தான் விவேக். அவனை பார்த்ததும் அங்கே இருந்த கல்லூரி முதல்வரின் செயலாளர், மீரா அவசரமாக எழுந்து வந்தாள்.

  

"வாங்க விவேக் சார்.... ஏதாவது முக்கியமான விஷயமா?"

  

"ஆமாம் மேடம்... நான் சாரை கொஞ்சம் அவசரமா பார்க்கனும்..." என்றான் விவேக் கட்டளையிடும் தோரணையில்.

  

"ஒரு நிமிஷம் இங்கே உட்காருங்க சார்... நான் போய் சார் கிட்ட கேட்டுட்டு வரேன்...." என்று சொல்லி விட்டு ஓடாதக் குறையாக உள்ளே சென்றாள் மீரா.

  

விவேக் ஆழ்ந்த மூச்சை எடுத்து வெளியேற்றினான். பராதி அவனை தடுக்க வருகிறாளா என ஒருமுறை திரும்பிப் பார்த்தான். அவள் அவன் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை எங்கும் தென்படவில்லை.

  

என்ன திமிர்... என மனதில் நினைத்துக் கொண்டு, பல்லைக் கடித்தான் விவேக்.

  

அதற்குள் அறையில் இருந்து வெளியில் வந்த மீரா, 

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.