(Reading time: 14 - 27 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"நீங்க உள்ளே போங்க விவேக் சார்... நான் சார் கிட்ட சொல்லிட்டேன்...” என்றாள்.

  

அவளுக்கு ஒரு நன்றி சொல்லி விட்டு கல்லூரி முதல்வரின் அறையின் உள்ளே சென்றான் விவேக். அவனை எப்போதும் போல் அன்புடன் வரவேற்றார் சிதம்பரம், அந்த கல்லூரியின் முதல்வர்.

  

"வாங்க விவேக்... எப்படி இருக்கீங்க? அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி, எல்லோரும் சௌக்கியமா? குட்டி பாப்பா எப்படி இருக்கா?"

  

"எல்லோரும் நல்லா இருக்காங்க சார்...."

  

"உங்க தங்கச்சி எப்படி இருக்கா? அவளுக்கு நம்ம காலேஜ் பிடிச்சிருக்கா?"

  

"அதைப் பத்தி பேச தான் சார் வந்தேன்... எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?"

  

"என்ன விவேக் இப்படி ஃபார்மலா பேசிட்டு இருக்கீங்க...?? சொல்லுங்க என்ன விஷயம்?"

  

"என் தங்கச்சிக்கு Basic Electrical and Electronics சப்ஜெக்ட் எடுக்கிறாங்களே ஒரு லெக்சரர் அவங்களை மாத்த முடியுமா சார்?"

  

"Basic Electrical and Electronicsன்னா... உங்களுக்கு லெக்சரர் பேர் தெரியுமா?"

  

"தெரியும் சார்... பாரதி..."

  

"பாரதியா?" என்றார் சிதம்பரம் ஆச்சர்யத்தோடு.

  

"ஆமாம் சார்... அவங்க சரி இல்லை... அதனால தான் மாத்த முடியுமான்னு கேட்கிறேன்..."

  

"என்ன ஆச்சு விவேக்...? அப்படி பாரதி என்ன செஞ்சாங்க?"

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.