(Reading time: 14 - 27 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

கேட்கவே இல்லன்னா பார்த்துக்கோங்க.... நம்ம பரமசிவம், அது தாங்க சிவா மில் ஓனர் அவர் கூட அடுத்த நம்ம சங்க எலெக்ஷன்ல விவேக்கை தான் தலைவர் பதவிக்கு நிக்க வைக்கனும்னு சொன்னார்..." என்றாள் பெருமையாக!

  

அதை ஏற்றுக் கொண்டு நரேந்திரனும் விவேக்கை பற்றி புகழ்ந்து பேசினார்... ஆனால் அதே நேரத்தில், மதுவும், உமாவும் ரகசியமாக கண்கள் சிமிட்டி சிரிப்பது விவேக்கின் கண்ணில் பட்டது...

 

அவர்களின் சிரிப்பிற்கு காரணம் என்ன என்று தான் அவனுக்கே தெரியுமே!!! அந்த பாரதியின் மீது அவனுக்கு கோபம் பொங்கியது. இப்படி அவனை பார்த்து மற்றவர் சிரிக்கும் படி செய்து விட்டாளே!!!

  

*************

  

"ண்ணி... என்னோட மன்த்லி டெஸ்ட் ரிசல்ட்ஸ் பார்க்குறீங்களா? அசந்துப் போக போறீங்க.... நான் 95 மார்க்ஸ் வாங்கி இருக்கேன்...."

  

தன் கைக்குழந்தை நித்யாவை தூங்க வைத்துக் கொண்டிருந்த உமா, மதுமதியின் உற்சாக குரலில் நிமிர்ந்துப் பார்த்தாள். பின் குழந்தை தூங்குவதை சைகையால் காட்டி அமைதியாக மதுவை இருக்க சொன்னாள். சிறிது நிமிடம் கழித்து குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்து தட்டிக் கொடுத்து விட்டு, மதுமதி அருகில் வந்தாள்.

  

"சாரி மது... இப்போ சொல்லு... "

  

"என்ன அண்ணி சாரி பூரின்னு எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க... இங்கே பாருங்க..." என்று சில காகிதங்களை உமா பக்கம் நீட்டினாள் மதுமதி.

  

அவள் நீட்டிய தேர்வு தாள்களை பார்த்த உமா, மதுமதி மற்ற பாடங்களில் 60-80 மதிப்பெண் வாங்கி இருப்பதையும் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் 95 வாங்கி இருப்பதையும் பார்த்தாள்.

  

"சூப்பர் மது... 95 வாங்கி இருக்கிறது உங்க பாரதி மேடம் சப்ஜெக்ட் தானே?"

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.