(Reading time: 14 - 27 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

"ஹலோ பார்த்தி... எப்படிடா இருக்க?" என்றபடி நண்பனின் அருகில் சென்று கைக் குலுக்கினான் விவேக்.

  

"எனக்கு என்னடா குறைச்சல் நான் நல்லா தான் இருக்கேன்... வா அந்த பக்கம் காஃபி ஷாப்ல உட்கார்ந்து பேசுவோம்..."

  

பேசியபடி இருவரும் அருகில் இருந்த காஃபி ஷாப் சென்று அமர்ந்தனர். பல நாள் கழித்து சந்திக்கும் நண்பர்கள் பேசிக் கொள்ளும் பொதுவான விஷயங்களை பேச ஆரம்பித்தனர்... பின்,

  

"விவேக், உன் தங்கச்சி நம்ம காலேஜில தானே படிக்குறா... எப்படி இருக்காம் காலேஜ் லைஃப்?" என்று விசாரித்தான் பார்த்திபன்.

  

"நல்லா என்ஜாய் பண்ற மாதிரி தான் இருக்கு...." என்ற விவேக்கின் மனதில் சட்டென்று அந்த எண்ணம் தோன்றியது.

  

பாரதியும் அவனும் சந்தித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியிருந்த போதும், அன்று காலேஜில் நடந்த விஷயம் நீரு பூத்த நெருப்பாக விவேக்கின் நெஞ்சில் கனன்று கொண்டே தான் இருந்தது. பார்த்திபன் அந்த ஆர் ஆர் பொறியில் கல்லூரி நிர்வாகியின் மகன்... அவனுக்கு நெருங்கிய நண்பனும் கூட...

  

"ஏன் பார்த்தி... நீ உங்க காலேஜ் பக்கம் எல்லாம் போறதே இல்லையா? பேரெண்ட்ஸ் கூட எல்லாம் மீட்டிங் எதுவும் வைக்கிற மாதிரியே தெரியலையே...?"

  

"என்னடா விவேக் இவ்வளவு சீரியஸா பேசுற... என்ன விஷயம்?"

  

"போடா... உன்கிட்ட சொன்னா மட்டும் என்ன நடக்கப் போகுது?"

  

"ஹே விவேக்... என்னடா இப்படி அலுத்துக்குற? அது நம்ம காலேஜ்டா.... நீ ஏன் நண்பன்டா...."

  

"ம்ம்ம்... நீ தான் இதை சொல்ற... அங்கே அந்த காலேஜில எல்லாம் யார் நம்மளை

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.