வீடு திரும்பிய ரமணியைக் கண்டதும்தான் மஞ்சுளாவிற்கும் கோதைக்கும் நிம்மதியே வந்தது, அதுவரை கவலையுடன் இருந்தவர்கள் முகத்தில் சின்ன சிரிப்பு வந்தது, ரமணியிடம் இருவருமே வந்தார்கள், இருவருமே ரமணியை கட்டிக் கொண்டார்கள், இருவரின் பாசத்தில் திக்குமுக்காடிப் போன ரமணியோ எதேச்சையாக தயாளனைப் பார்க்க அவரோ கோபத்தில் இருந்தார்.
வழியெங்கும் இருவருமே பேசிக் கொள்ளவில்லை, இப்போது தயாளனின் முகத்தில் இருக்கும் கோபத்தைக் கண்டதும் ரமணிக்கு திக்கென்றது, எங்கே கோபத்தில் கண்ணனை பகைத்துக் கொண்டால் உண்மை வெளிப்பட்டு விட்டால் என்னாவது என நினைத்து அச்சத்தில் தன்னை அணைத்திருந்தவர்களை விட்டு விலகி நின்றவர்
”இதோட இந்த பிரச்சனையை முடிச்சிக்கலாம் மேற்கொண்டு எதையும் செய்ய வேணாம்” என தயாளனிடம் சொல்ல அவரோ குழம்பி பின்
”உனக்கு யாருமில்லைன்னு நினைக்க வேணாம் நான் இருக்கேன் ரமணி” என சொல்ல அவரோ
”போதும்” என்றார் கடுப்பாக அதில் அவரோ
”எதுவாயிருந்தாலும் சொல்லு மலையளவு பிரச்சனையானாலும் சரி நான் தீர்த்து வைக்கிறேன்”
”பிரச்சனை எதுவும் இல்லை, இந்த விசயத்தை இதோட விட்டுடுங்க அதான் எல்லாருக்கும் நல்லது” என சொல்லிவிட அதற்கு மேல் தயாளனால் ஏதும் பேச இயலாமல் அங்கிருந்து தன் அறைக்குச் சென்றார். அவர் சென்றதும் மஞ்சுவோ ரமணியிடம்
”அக்கா என்னாச்சிக்கா எங்க அக்கா போனீங்க உங்களை காணலைன்னு நாங்க எவ்ளோ பயந்தோம் தெரியுமா“
”என்ன உளர்ற மஞ்சு நான் என்ன குழந்தையா காணாம போறதுக்கு, ஒரு முக்கியமான பேஷன்ட் பார்க்க அவங்க வீட்டுக்குப் போயிருந்தேன் அவ்ளோதான்”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.