(Reading time: 17 - 34 minutes)
Manasa Theevu
Manasa Theevu

  

"அதுக்கு இல்லடி குழந்தை இது நம்மளவா வீடு இல்லை இல்லையா, அதாண்டி குழந்தை கேட்டேன்."

  

"இதுவும் நம் வீடுதான் மாமி, நான் தான் இந்த ஆத்துல சமையல் எல்லாம்…  பரவாயில்லை மாமி எல்லாம் நானே செய்தேன் கவலைப்படாமல் சாப்பிடுங்கோ!"

  

"தப்பா நினைக்காதடி குழந்தை.."

  

" உனக்குத் தெரியுமா தெரியாதான்னு, தெரியாது உங்க அப்பா ஹாஸ்பிடல்ல இருக்கிறார்."

  

"என்ன மாமி சொல்றீங்கோ,  எங்க அப்பாக்கு என்ன ஆச்சு?"

  

"ஐயோ ஒனக்கு தெரியாதா? உங்க அப்பாக்கு மார்வலின்னு  ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனா அப்படியே அட்மிட் பண்ணச் சொல்லிட்டா."

  

"எனக்குத் தெரியாது மாமி எந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கா தெரியுமா உங்களுக்கு?"

  

"நம்ம ஆத்துகிட்டயிருக்கிற ஹாஸ்பிடல் தாண்டி கண்ணு அட்மிட் பண்ணி இருக்கா."

  

"சரி மாமி நான் இன்னிக்கே போய் பார்க்கிறேன்."

  

" உங்க அம்மா பாவம்டி  உன்னையே நினைச்சுண்டு  இருக்கா."

  

"எனக்கு தெரியும் மாமி. "

  

ஆனாலும் உங்க அப்பாக்கு இவ்வளவு நெஞ்சத்தழுத்தம் கூடாதிடிம்மா."

  

"மாமி அவரே உடம்பு சரி இல்லாம இருக்கார் அவரைப் பத்தி ஒன்னும் சொல்லாதீங்கோ."

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.