(Reading time: 17 - 34 minutes)
Manasa Theevu
Manasa Theevu

எல்லாம் டாக்டர்கிட்ட பேசிட்டார், நம்ம வேறு ஒரு ஆஸ்பிடல் போறோம் அங்க அப்பாக்கு நல்ல ட்ரீட்மெண்ட் கொடுக்கிறோம்"

  

"ஐயோடி! எனக்கு பயமா இருக்கு நீ என்னோடையே  இருக்கியா?"

  

"ஆமாம் அம்மே உன்னோடு தான் இருக்க போறேன், அச்சனுக்கு நல்லா ஆகிற வரை இங்க தான் இருப்பேன்."

  

மாதவன், அந்த ஆஸ்பிடல் டாக்டரிடம்  சென்று பேசி எல்லாவற்றையும் தெரிந்து கொண்டான். அந்த டாக்டரிடம், தங்களுடைய டாக்டர் பெயரை சொல்லி, அங்கே நான் கூட்டிக்கொண்டு போய் அவருக்கு டிரீட்மென்ட்கொடுக்கிறேன் என்று கூறினான்.

  

அந்த டாக்டரும் "அதுதான் சரி, அங்கு நல்ல ட்ரீட்மெண்ட் கிடைக்கும்  பெரிய டாக்டர், "என்று அவரே கூறிவிட்டார்.

  

டிஸ்சார்ஜ்க்கு எல்லா ஏற்பாடும் செய்து ஆம்புலன்சை வரவழைத்து, மானசா யின் அப்பாவை அந்த ஹாஸ்பிடலுக்கு மாற்றிவிட்டான் மாதவன்.

  

மானசா தன் அம்மாவை ஆம்புலன்சில் ஏற்றி விட்டு, தான் மாதவனுடன் காரில் ஆஸ்பத்திரிக்கு சென்றாள்.

  

அங்கு சென்றவுடன், அவள் அப்பாவிற்கு மடமடவென்று ட்ரீட்மென்ட் எல்லாம் நடந்தது, எல்லா டெஸ்டும் செய்து கடைசியில் அவருக்கு ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறினார்.மானசா  தன் அம்மாவிடம் விரிவாக கூறி அவரை ஒத்துக் கொள்ள வைத்தாள். அடுத்த நாள் காலையில் ஆபரேஷன் என்று டாக்டர் கூறிவிட்டுச் சென்றார்.

  

"தம்பி கார்த்திக் எங்கே? கார்த்திக்கிடம் சொல்ல வேண்டாமா?"

  

"கார்த்திக் இப்பதான் காலேஜ் போக ஆரம்பித்து இருக்கான், இப்ப அவனை தொந்தரவு செஞ்சா அவன் படிப்பு பிராபளம் ஆயிடும்,”என்றார், அவள் அம்மா.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.