அங்கே வந்த ஹிஸ்டரி பட்டனை அழுத்தி, முன்பு ஆதி சம்பிட் செய்திருந்த அவனுடைய பார்ம்-டெக் விபரங்களை எடுத்து மீண்டும் போட்டிக்கு சம்பிட் செய்தாள்.
தேங்க்ஸ் பார் யுவர் சம்பிஷன் என்று மெசேஜ் வந்த போது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
ஆதி வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென்றால் அவன் அவனின் ஐடியாக்களை உலகத்திற்கு பகிர வேண்டும், உலகை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். இப்படி பயந்துக் கொண்டே இருந்தால் அவன் எப்படி ஜெயிக்க முடியும்?
இப்போது அவள் சம்பிட் செய்திருக்கும் அவனின் ப்ராஜக்ட் ஐடியா ஆதிக்கு வெற்றியை தேடி தருவதோடு அவனுக்கு வேண்டிய தன்னம்பிக்கையை கொடுக்கும் என்று அவள் நம்பினாள்.
ஆதியும் அக்ஷராவும் காம்பெடிஷன் நடைப்பெறும் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார்கள்.
“எனக்கு டென்ஷனா இருக்கு அக்ஷரா. நீ எப்படி இன்னைக்கு கூலா இருக்க?” ஆதி அக்ஷ்ராவிடம் வினவினான்.
“நானும் நெர்வஸா இருக்கேன் ஆதி. உனக்கு அது தெரியலை அவ்வளவு தான்.”
“நம்ம ஐடியா பர்ஸ்ட்டா வந்தா ஜாக்ருதியை சந்திக்கலாம்! அது என்ன ஒரு அருமையான வாய்ப்பா இருக்கும்.”
“ட்ரூ. செகன்ட், தர்ட் வந்தா கூட நல்ல எக்ஸ்போஷர் கிடைக்கும், ஆதி!”
“அதுவும் கரக்ட். இரண்டாயிரம் சொச்சம் டீம்ல இருந்து முதல் ட்வென்டில வந்துட்டோம். இங்கே இருந்து முதல் மூணு இடத்துக்கு போவோமா?”
“போவோம்!”