“அம்மா டென்ஷன் ஆகுற அளவுக்கு அஸ்வின் அப்படி என்ன செஞ்சார்?” என்றுக் கேட்டபடி விஜயசாந்தியுடன் நடந்தாள் சுவாதி,
“வேறென்ன சுவா, ஆல் வயசுக் கோளாறு! அவன் இங்கே இருக்காம தனியா போய் என்னவோ செய்ய போறேன்னு சொன்னப் போதே எனக்குத் தெரியும், இப்படி தான் ஏதாவது வரும்னு...” என்ற விஜயசாந்தி பக்கம் திரும்பி பார்த்த சுவாதி,
“என்ன ஆச்சு? யாரையாவது கல்யாணம் செய்துக்கிட்டாரா???” எனக் கேட்டாள்.
தன் நடையின் ஸ்பீடை குறைத்து, ஆச்சர்யமாக சுவாதி பக்கம் பார்த்த விஜயசாந்தி,
“வாவ் சுவா!!!! லவ் செய்றானான்னு கேட்காம நேரா கல்யாணம் செய்துக்கிட்டானான்னு கேட்குற??? நீ ரொம்ப அட்வான்ஸ்ட் பா!!!” என்றாள்.
சுவாதி உதட்டைக் கடித்துக் கொண்டு பேசாமல் நடந்தாள். அவள் வாழ்வில் நடந்தது எல்லா இடத்திலும், எல்லோருக்கும் நடக்குமா என்ன???
அன்று விஷாகன் திடீரென தாலியுடன் அவள் அருகில் வந்த போது, என்ன, ஏது, என்று எதையுமே யோசிக்க அவளுக்கு தோன்றவே இல்லை...
இன்று, இப்போது, அன்று நடந்ததை நினைத்தாலும் அவளுக்கு மெய் சிலிர்க்க தான் செய்கிறது!
விஷாகன்...!
அவளின் கணவன் எத்தனை அன்பானவன்...!
சுவாதி தன்னை மறந்து யோசனையில் ஆழ்ந்த படி நடந்தாள்...!
விஜயசாந்தி தனக்கு தெரிந்த விபரங்களை சொல்ல தொடங்க, சுவாதி தன் யோசனையில்
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.