“அம்மாக்கு முதல்ல இருந்து பாட்டு போடு, ரித்விக்!” கயல்விழி சிடி கவரை கையில் வைத்துக் கொண்டு ஒன்றும் சொல்லாமல் நின்றுக் கொண்டிருக்கவும், வேதா பாட்டை கேட்டு ரசித்துக் கொண்டிருந்த ரித்விக்கிடம் சொன்னாள்.
ரித்விக், மானசி இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ரிவைண்ட் செய்து ப்ளே செய்தார்கள்.
சுருக்கமாக டைட்டில் கார்ட் வந்துப் போனது. தொடர்ந்து கிட்டாருடன் தோன்றினான் நித்தேஷ். அவன் முன்னே ஒரு சிறிய மீன்தொட்டியில் அழகிய மீன் ஒன்று இருந்தது.
“ஹே எவ்ரிபடி! ஹவ் யூ டூயிங்?” சரளமான ஆங்கிலத்தில் நித்தேஷ் திரையில் கேட்கவும் கயல்விழியின் கண்கள் அவன் உருவம் மேலேயே ஒட்டிக் கொண்டது.
“நிறைய வருஷம் கழித்து நான் எழுதி கம்போஸ் செய்திருக்க பாட்டு இது. இதை ஸ்டார்ட் செய்ததும் எனக்கு தானா புத்துணர்வு வந்திருக்கு. உங்களுக்கு இந்த சாங் பிடிக்குமான்னு தெரியலை. அதைப் பத்தி மறக்காம கமண்ட்ஸ் சொல்லுங்க. பாட்டை ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி ஒரு விஷயம். இசை எனும் உலகத்தை விட்டு தள்ளி இருந்த என்னை மீண்டும் பழைய நாட்களை நினைவுப் படுத்தின பெருமை என் குட் பிரென்ட் வேதாவை சேரும். அவங்களைப் போல ஒரு ரசிகை இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம். அடுத்து, நான் ம்யூசிக் சொல்லிக் கொடுப்பதாக சொல்லிக் கொண்டாலும், உண்மையில் எனக்கு ம்யூசிக் மேலே திரும்ப ஆர்வம் வர காரணமா இருந்த இரண்டு பேபீஸ் ரித்விக், மானசி. அதனால இந்த பாட்டு வேதா, ரித்விக் மற்றும் மானசிக்கு டெடிகேட் செய்றேன்.”
ரித்விக்கும், மானசியும் இதை பலத் தடவை ஏற்கனவே கேட்டிருந்தாலும் இப்போதும் கைத்தட்டி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
கயல்விழி எதுவும் சொல்லவில்லை. டிவி திரையில் விழி பதித்து தொடர்ந்த பாடலை கவனித்தாள்.
I want to hug you,
Vetha good friend for kayal
Rocky ena panna porankalo
Kayal and rocky santai epa mutium