“கயல், இன்னும் இப்படி பார்மலா தான் பேசனுமா? ரித்விக்கும் மானசியும் க்ளோஸ் பிரென்ட்ஸா இருக்காங்க. நீயும் நானும் அவங்க அளவுக்கு இல்லாம போனாலும் நல்ல பிரென்ட்ஸ் மாதிரி தான் இருக்கோம். என் கிட்ட நீ சாதாரணமா பேசினாலே போதும்.”
“நல்ல பிரென்ட்ஸ் மாதிரின்னு நீ எனக்காக சொல்றது புரியுது. நீ ரொம்ப நல்ல பிரென்ட் வேதா. நான் அப்படியான்னு தெரியலை. எதையுமே அக்ஸப்ட் செய்துக்க எனக்கு பயமா இருக்கு, தயக்கமாகவும் இருக்கு,” கயல்விழியின் பேச்சு இப்போது குழப்பத்துடன் ஒலித்தது.
“அது உனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் வந்தது கயல். என்னால புரிஞ்சுக்க முடியும்! ராக்கியும் கூட புரிஞ்சுப்பார்.”
வேதா ராக்கி பெயரை சொன்னதற்காக கயல் அதிர்ந்து போகவில்லை. மாறாக யோசித்துப் பேசினாள்.
“தயவு செய்து அவரைப் பத்தி என் கிட்ட தேவைக்கு அதிகமா பேசாதே, வேதா. வேணும்னே உண்மையை மறைச்சுட்டு ஒரு மன்னிப்பு கூட கேட்க மாட்டேங்குறார்!”
“ராக்கி உன் கிட்ட சாரி சொல்லலையா?”
“இல்லை, வேற நிறைய கதை சொன்னார்!”
“எனக்குப் புரியலையே! ராக்கி அப்படி செய்றவர் கிடையாது.”
“இதெல்லாம் எனக்கு இப்போ எதுக்கு. உனக்கு அவர் ம்யூசிக் பிடிக்கும், நான் அதை தடுக்க நினைக்கலை. அதை தாண்டி நாம அவரைப் பத்தி பேச வேண்டாம்.”
“உனக்கு பிடிக்காததை நான் பேசலை கயல். ஆனாலும் ராக்கி பத்தி பைனல் டெசிஷன் இப்போவே எடுக்காதே. அவருக்கு டைம் கொடு. அவர் கெட்டவர் கிடையாது, நல்லவர்!”
Vetha good friend for kayal
Rocky ena panna porankalo
Kayal and rocky santai epa mutium