(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்...  - 09 - பிந்து வினோத்

09. சொல்லாமல் என்னை எடுத்தாய்... பதிலாக உன்னைக் கொடுத்தாய்...

  

னதிள் இருந்த எண்ணங்களை மறைத்து விட்டு, கற்பகத்தைப் பார்த்து புன்னகைத்தாள் பவித்ரா. பதிலுக்குப் புன்னகைத்த கற்பகம், ஸ்ருதியையும் அழைத்துக் கொண்டு பவித்ரா, பாரதி அருகில் வந்தாள்.

  

மரியாதை நிமித்தம் பாரதியும், பவித்ராவும் எழுந்து நிற்கவும்,

  

என்ன நீங்க?? இப்படி எழுந்து எல்லாம் நிற்க வேண்டாம்...” என்றாள் கற்பகம்.

  

பரவாயில்லை இருக்கட்டும் மேடம்...” என்றாள் பாரதி.

  

நீங்க ரெண்டுப் பேரும் சாப்பிட்டீங்களா? சாரி, சரியா உங்க ரெண்டு பேர் கூடவும் பேச முடியலை... மது உங்களைப் பத்தி நிறைய சொல்லி இருக்கா... இன்னொரு நாள் ரெண்டுப் பேரும் ஃப்ரீயா இருக்கும் போது வீட்டுக்கு வாங்க...”

  

அதெல்லாம் ஒண்ணுமில்லை மேடம்... கட்டாயம் வர்றோம்....”

  

ற்பகத்திடம் பாரதியே பதிலளிக்க, பவித்ரா மும்முரமாக கற்பகத்தின் அருகில் இருந்த ஸ்ருதியை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள். அவளின் பார்வையை கவனித்த கற்பகம்,

  

அட ஸ்ருதியை உங்களுக்கு இன்ட்ரட்யூஸ் பண்ணவே இல்லையே... எல்லாம் நல்ல படியா நடந்தால், அடுத்து இந்த வீட்டில் நடக்கும் ஃபங்க்ஷன் சுருதி விவேக் கல்யாணமா தான் இருக்கும்... உங்களுக்கு கட்டாயம் இன்விடேஷன் கொடுப்பேன்... நீங்களும் வந்துரனும்...” என்றாள்.

  

கட்டாயமா....” என்றாள் பாரதி, கிட்டத்தட்ட எந்த மாற்றமும் இல்லாமல்.

  

பவித்ராவிற்கு பாரதியைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. கற்பகமும் ஸ்ருதியும் நகர்ந்துச் சென்ற பின்,

  

எப்படி உன்னால அவ்வளவு ஈசியா பதில் சொல்ல முடிஞ்சது, பாரு? எனக்கு என்னவோ அந்த

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.