(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

ஸ்ருதியை பிடிக்கலை....” என்றாள் பவித்ரா.

  

ப்ச்... என்ன பவி நீ? நீயா எதையாவது தப்பா நினைச்சிட்டு மத்தவங்களை குறை சொன்னால் எப்படி? விவேக் சொன்னது நிஜம் தான்னு இப்போ நம்புறீயா?”

  

ம்ம்ம்ம்...”

  

தோழிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையப் போகும் வாய்ப்பு இருப்பதாக எண்ணி கொண்டிருந்த பவித்ராவிற்கு, இப்படி ஒரு அன்ட்டி-கிளைமேக்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்காததால், ஏமாற்றமாக இருந்தது.

  

**************

  

ந்த வார நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது...

  

வெள்ளிக் கிழமை மாலை, சாலையில் வேகமாகச் சென்றுக் கொண்டிருந்த கல்லூரி பேருந்தில், தன் அருகில் அமர்ந்திருந்த தோழியைப் பார்த்து,

  

என்ன விஷயம், பாரு? நானும் உன்னை ரெண்டு நாளா பார்த்துட்டு தான் இருக்கேன்... உன் முகமே சரி இல்லை...” என்று விசாரித்தாள் பவித்ரா!

  

பவித்ராவின் கேள்வி காதில் விழுந்தப் போதும் பாரதி எதுவும் சொல்லவில்லை.

  

அப்படி என்ன விஷயம்???? என் கிட்ட சொல்ல இவ்வளவு யோசிக்குற? காலேஜ் டைமில கேட்க வேண்டாம்னு தான் வீகென்ட் வர வெயிட் பண்ணிட்டு இருந்தேன்... என்ன பாரு?

  

தொடர்ந்து பாரதி மெளனமாக இருக்கவும்,

  

பாரு, சொல்ல பிடிக்கலைன்னா விடு... நான் உன்னை இதுக்கு மேல கட்டாயப் படுத்த எல்லாம் விரும்பலை...” என்றாள் பவித்ரா!

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.