(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

இப்படி சொன்னால் பாரதி பேசுவாள் என்று எல்லாம் பவித்ரா எதிர்பார்க்க வில்லை. அவளுக்கு தெரியும் பாரதி விரும்பினால் மட்டும் தான் எதையும் சொல்வாள் என்று.

  

சில வினாடிகளுக்குப் பிறகு,

  

பிடிக்குது பிடிக்கலைன்னு எல்லாம் இல்லை, பவி... எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு...” என்றாள் பாரதி.

  

என்ன குழப்பம்...??” விஷயம் புரியாமல் கேட்டாள் பவித்ரா.

  

எல்லாம் மது பத்தி தான்...” என்று இழுத்தாள் பாரதி.

  

மது???”

  

இல்லை... அவளோட அண்ணன் பத்தி...”

  

தோழியிடம் இருந்து தயக்கத்துடன் வந்த பதிலை கேட்டு மிகவும் ஆச்சர்யப் பட்டாள் பவித்ரா.

  

பாரு????”

  

ஆமாம் பவி... எப்படி சொல்றதுன்னு புரியலை...”

  

தோழியை கூர்மையாக ஒரு பார்வை பார்த்த பவித்ரா,

  

உனக்கு அவரைப் பிடிச்சிருக்கா???” எனக் கேட்டாள்.

  

உண்மையா சொல்ல போனால் எனக்கு தெரியலை பவி... ஆனால் விவேக்கைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும் ஏனோ எப்போதும் கட்டுபாடுடன் இருக்கும் என் மனம் கட்டுப்பாடை இழக்குது... ஒரு வேளை எங்கே அவரை பிடிச்சிருமோன்னு ரொம்ப பயமா இருக்கு...”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.