தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 40 - நவ்யா
“விஸ்வநாதன் சார்! உங்களை நான் எக்ஸ்பெக்ட் செய்யவே இல்லை. உள்ளே வாங்க சார்!” என சொல்லி விஸ்வநாதனை மனமார வரவேற்றாள் ஜனனி. உண்மையில் அவளுக்குள் ஏமாற்றம் தோன்றி அலைகழித்தது!
உமேஷின் வருகை ஜனனியை உற்சாகப் படுத்தி இருந்தது. அவனுடன் தனிமையில் சில மணி நேரங்கள் செலவிட விரும்பி இருந்தாள்.
ஆனால் விஸ்வநாதனின் திடீர் வருகை அவளின் ஆசைக்கு முட்டுக்கட்டை இட்டு இருந்தது.
முதல் சில வினாடிகள் ஆச்சர்யப்பட்டு இருந்தாலும் ஜனனியால் விஸ்வநாதனின் வருகைக்கான காரணத்தை இப்போது ஊகிக்க முடிந்தது. அவள் செய்துக் கொண்டிருக்கும் கோல்மால் வேலைக்கு விஸ்வநாதன் வந்திருப்பதோ, அவரிடம் தென்பட்ட கோபமோ அதிசயம் இல்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
ி எதிர்பார்த்திருக்கவில்லை!
ஜனனி வரவேற்றாலும், விஸ்வநாதன் வீட்டிற்குள் வரவும் இல்லை ஜனனியின் வரவேற்புக்கு பதிலும் சொல்லவில்லை.
“என்ன செய்து வச்சிருக்க ஜனனி? உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன் தெரியுமா? எதுக்காக தர்மா கிட்ட அவனும் காருண்யாவும் பிரியுறது தான் சரின்னு சொன்ன??? எதுக்கு இப்படி செய்ற?” என படபட என கேள்விகள் கேட்டார்.