தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 09 - பிந்து வினோத்
This is a Chillzee Originals - Princess Novel episode.
- Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
- Visit Chillzee Princess Novels page for other current Chillzee Princess stories.
டீ தயாரிக்க ரெடியான சாரதா, தன் பக்கத்திலேயே நின்றிருந்த ரோஹினியை வாஞ்சையுடன் பார்த்தாள்!
ரோஹினியின் கண்களில் மின்னிய ஆர்வம் சாரதாவிற்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது!
பின்னே டிவி வேண்டாம் கிச்சன் தான் வேண்டும் என சொல்லும் இளம்பெண்ணை பார்த்து அவள் வேறென்ன செய்ய முடியும்!
“ரோஹினிம்மா, உனக்கு டீ போட தெரியுமா??” எனக் கேட்டப் போது சாரதாவின் குரலில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கொஞ்சல் இருக்க தான் செய்தது!
அது புரிந்தோ என்னவோ, ரோஹினியின் முகம் இன்னும் மென்மையாகி மலர்ந்தது! அப்படியே சாரதா கேட்ட கேள்விக்கு பதிலாக இல்லையெனும் அர்த்தத்தில் தலை அசைத்தாள்!
“ரொம்ப ஈசிடா! கத்துக்குறீயா???”
சாரதா ஏதோ கேல்குலஸ் படிக்க சொல்லி விட்டது போல ரோஹினியின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது! இருந்தாலும், தலை அசைத்து “சரி,” என்றாள்!
சாரதா டீ தயாரிக்கும் வேலையை தொடங்கி, அப்படியே செய்வதை வார்த்தைகளாக ரோஹினிக்கு சொல்லிக் கொடுத்தாள்!
“வேண்டிய அளவு பாலை முதல்ல எடுத்து காய்ச்ச வைக்கனும்... அப்புறம் வேண்டிய அளவு டீத்தூள் போடனும்... நிறைய பேர் லேட்டா போடுவாங்க... நான் பாலை வச்ச உடனேயே போட்ருவேன்...”
ரோஹினிக்கு அவள் சொன்னது பாதி கூட புரியவில்லை இருந்தாலும், டீச்சர் மனதை நோகடிக்க விரும்பாத மாணவியாக புரிந்ததாக பாவ்லா செய்து, “ம்ம்,” என்றாள்!
கிச்சன் ஜன்னல் வழி தெரிந்த வானத்தை எட்டிப் பார்த்த சாரதா, “வெயில் போயிடுச்சு... நான்