ரோஹினி தட்டு தடுமாறி சொன்ன பிறகு தான் சாரதாவிற்கு அவள் யார் என்பது மீண்டும் நினைவுக்கு வந்தது!
“அச்சோ!!! என்னை சொல்லனும்!!! நீ இளவரசி ஆச்சே!!! உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்... சாரிடா ரோஹினிம்மா! மறந்தே போயிட்டேன்... நீயாவது சொல்லி இருக்கலாமே...!!!”
சாரதா ரோஹினியின் கைகளில் பர்னாலை போட்டுக் கொடுத்தாள்!
ரோஹினி அமைதியாகவே இருக்கவும், “ஏண்டா தெரியாதுன்னு என் கிட்ட சொல்லலை???” என மீண்டும் வினவினாள் சாரதா!
“சும்மா செய்து பார்க்கலாம்ன்னு நினைச்சேன்... ஆசையா இருந்துச்சு... நீங்க சொன்னப்போ ஈஸியா தான் தோணிச்சு...”
“நல்ல ஆசை தான் போ....” என்றபடி சிவந்திருந்த கை விரல்களில் மீண்டும் நன்றாக பர்னால் தடவி விட்டாள் சாரதா!
“ஹப்பா... எவ்வளோ சாஃப்ட்டா இருக்கு உன் கை... இளவரசின்னா சும்மாவா...”
எதையோ சொல்ல வந்த ரோஹினி, சாரதாவின் முகத்தில் இருந்த புன்னகையை பார்த்து விட்டு வாயை மூடிக் கொண்டாள்!
“உனக்கு இந்த டீ போட கத்துக்குற வேலை எல்லாம் வேண்டாம்,” என்று சொல்லி விட்டு, வேறு பாத்திரத்தில் மீண்டும் பாலை காய்ச்ச வைத்து, டீத்தூள் கலந்து விட்டு, கொட்டி இருந்த பாலை துடைத்து சுத்தம் செய்தாள் சாரதா! அதற்குள் தேனீர் பொங்கி வரவும், அதை இலகுவாக பேக்லைட் கைப்பிடியில் பிடித்து எடுத்து, வடிக்கட்டி, சர்க்கரை கலந்து ஆற்றினாள் சாரதா!
சாரதா செய்வதை இமைக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரோஹினி!