Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 42 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஓரிடத்தில் குமார் ஓடுகையில் தில்லையின் ஆட்களால் சுற்றி வளைக்கப்பட்டான்.
தில்லையும் அவசரமாக வண்டியை நிறுத்திவிட்டு அவனிடம் சென்றான் கோபமாக. சம்யுக்தாவால் வண்டியை விட்டு இறங்க முடியவில்லை, வண்டியை லாக் செய்துவிட்டான் தில்லை. அதனால் அவள் உள்ளிருந்தபடியே வெளியே நடப்பதைப் பார்த்தாள், அங்கு குமாரோ தில்லையின் ஆட்களிடம் மாட்டிக் கொள்ளவும் பயத்தில் கெஞ்ச ஆரம்பித்தான், தில்லை வரவும் அவனிடமும் கைகூப்பி கெஞ்சினான். ஆனால் தில்லை மசியவில்லை. தனது ஆட்களிடம்
”பொருளை கொடு” என சொல்ல அவனது ஆளோ ஒரு நீளமான அருவாளை தில்லையிடம் தந்து
”அண்ணா குமாரோட ஆளுங்களை நாங்க போட்டாச்சி, இவன்தான் பாக்கி உன் கையால சாகனும்னுதான் இவ்ளோ தூரம் ஓடி வந்திருக்கான், எங்ககிட்ட கூட சிக்காம ஓடிவந்துட்டான், நீயே இவனை கொன்னு போடுண்ணே, இவன்லாம் உயிரோட இருக்க கூடாது” என வீரமாக ஒருவன் பேச அதைக் கேட்டபடியே தில்லையும் அந்த குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினான். அதில் அவனது உயிர் போகவில்லையானாலும் உடலில் பல இடங்களில் காயம்பட்டிருந்தது. ரத்தம் வழிய வழிய மயங்கி தரையில் சரிந்தான் குமார். அதோடு தில்லையின் கோபமும் குறைந்தது. தனது ஆட்களிடம்
”இவனை புதைச்சிடுங்க யாராவது கேட்டா தலைமறைவாயிட்டதா சொல்லிடுங்க புரியுதா”
”அண்ணா இன்னும் இவன் உயிர் போகலையே“
”பரவாயில்லை உசுரோடவே புதைச்சிடுங்க, இவன் செஞ்ச அக்கிரமத்துக்கு இப்படிதான் சாவு வரனும் சொன்னதை செய்ங்க” என சொல்ல அவர்களும் அந்த குமாரின் உடலை தூக்கிக் கொண்டு வேறு பக்கம் சென்றார்கள்.
கையில் அருவா அதில் ரத்தம் வழிய வழிய தனது சட்டை மற்றும் முகத்திலும் சில ரத்த துளிகள் இருந்தாலும் அதைப் பற்றி கவலையில்லாமல் வண்டியிடம் வந்தவன் கதவைத்