”உன் வேலையை பாரு” என திட்டிவிட சம்யுக்தாவிற்கு என்ன செய்வதென தெரியவில்லை. பயந்திருந்தாள்.
கதவை விடாமல் தட்டினாள். திறக்கவில்லை அவள் கை வலிக்கும் வரை தட்டிப்பார்த்தாள். கை வலி வரவும் அங்கிருந்த பொருளைக் கொண்டு கதவை தட்டினாள். அப்போதும் கதவு திறக்கப்படவில்லை. முழுதாக 1 மணி நேரம் ஆனது. சம்யுக்தாவும் ஓய்ந்துப் போய் ஓரிடமாக அமர்ந்துவிட்டாள்.
1 மணி நேரம் கழித்து கதவு திறக்கவும் பதறிக் கொண்டு உள்ளே வந்தாள் சம்யுக்தா, தில்லையோ வேறு உடையில் உற்சாகமாக வெளியே வர அவளுக்கு அவனை பார்க்கவே பிடிக்காமல் போனது. உள்ளே என்ன ஆனது என தெரிந்துக் கொள்ள ஆர்வம் கொண்டாள். ஆனால் அவனோ கதவை சாத்தி பூட்டிவிட அவளுக்கு வெறுப்பே வந்தது
”அந்த பொண்ணுங்களை என்ன செஞ்ச” என சம்யுக்தா கேட்க அவனோ சிரித்தபடியே சோபாவில் அமர்ந்துவிட்டான்
”உன்னைத்தான் கேட்கறேன் அந்த பொண்ணுங்களை நீ என்ன செஞ்ச”
”உன் வேலையை பாரு” என சொல்ல அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது. சில நொடிகளில் நடுத்தர வயதை தாண்டிய ஒருவர் அரக்க பரக்க வீட்டிற்குள் நுழைந்தார். அங்கிருந்த தில்லையை கண்டு
”தில்லை தில்லை என் பொண்ணுங்க எங்க” என வருத்தமாக கேட்க அவனோ தன் கையில் இருந்த சாவியை அவரிடம் தந்தான். அவரோ உடனே தன் கையில் இருந்த பையை அவனிடம் தர அவனும் அந்த பையை வாங்கி பிரித்தான். அதில் இருந்த பணக்கட்டுக்களை எண்ணத் தொடங்கினான்.
வந்திருந்த ஆளோ அவசரமாக கதவை திறந்து உள்ளே சென்றார். சம்யுக்தாவும் எழுந்து ஆர்வமாக அந்த அறைக்குள் செல்ல அதற்குள் அந்த 2 பெண்களையும் அழைத்துக் கொண்டு