(Reading time: 7 - 14 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

திறந்து அருவாளை பத்திரமாக சீட்டிற்கு அடியில் இருந்த இடத்தில் வைத்துவிட்டு ஏறிக் கொண்டு வண்டியை ஓட்டலானான்.

   

அவனது செயலைப் பார்த்து பயந்திருந்த சம்யக்தாவோ அவனின் முகத்திலும் சட்டையிலும் தெரிந்த ரத்ததுளிகளைக் கண்டு நடுங்கிவிட்டாள். எதுவும் பேசவில்லை அமைதியாக இருந்தாள்.

   

வீடு வந்து சேரும் வரை தில்லையும் அமைதியாக இருந்தான், வீடு வரவும் அவசரமாக இறங்கினான் தில்லை கூடவே அவளும் இறங்கினாள். விறுவிறுவென படியில் ஏறி தனது வீட்டை அடைந்தான் தில்லை அங்கிருந்த சித்தனோ தில்லையின் கோலத்தைக் கண்டு வெற்றிப் புன்னகைப் பூத்தான்

   

”சூப்பர்ணா” என சொல்ல 

   

“அந்த பொண்ணுங்க என்ன ஆனாங்க”

   

”இன்னும் மயக்கத்திலதான் இருக்காங்கண்ணா”

   

”சரி நீ போய் வண்டியை சுத்தம் பண்ணு”

   

”சரிண்ணா” என சொல்லியவன் உடனே வெளியே செல்ல பரபரப்பாக உள்ளே நுழைந்தாள் சம்யுக்தா. 

   

தில்லையோ அமைதியாக அவளைப் பார்த்தான். அவளோ பயந்திருந்தாள். அவளாக ஏதாவது பேசுவாள் என பார்த்தான் ஆனால் அவள் பேசாமல் இருக்கவே அமைதியாக உள் அறைக்குச் சென்றவன் கதவை இழுத்து சாத்தி தாப்பாள் போட அவளுக்கு பக்கென்றது, அவசரமாக கதவை தட்டினாள் உள்ளிருந்து தில்லையோ

   

”எதுக்கு தட்டற”

   

”அந்த பொண்ணுங்களை ஒண்ணும் செய்யாத தில்லை” என சொல்ல அவனோ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.