வெளியேறியவர் தில்லையை பாராமல் அவசரமாக வெளியேறினார். அந்த பெண்களோ தெளிவாக இருந்தார்கள், சீருடையில் இருந்தார்கள் அவர்கள் சென்றதும் சம்யுக்தா உள் அறைக்குச் சென்றுப் பார்த்தாள். எப்போதும் போல் அந்த இடம் இருந்தது அவளுக்கு சந்தேகம் வரும்படி எதுவும் நடக்கவில்லை என நினைத்து நிம்மதியானவள் அவசரமாக தில்லையிடம் வந்தாள்
”அந்த பொண்ணுங்களை நீ எதுவும் செய்யலை போல”
”இல்லை” என சொல்ல அவள் நிம்மதியானாள் அவளின் அமைதியைக் கண்டவன்
”அவங்களை நான் ஏதாவது செய்தா இவ்ளோ பணம் நமக்கு கிடைக்குமா என்ன வா வா வந்துப் பாரு 2 கோடி இந்தா” என சொல்லியதோடு அந்த பையை அவளிடம் நீட்ட அவளோ கோபமாக முறைத்தாள்
”உள்ள கொண்டு போய் பத்திரமா வை அவசரத்துக்கு தேவைப்படும்” என சொல்ல அவளோ அந்த பையை வாங்கி விசிறியடித்தாள். அவனோ நொந்துப் போனான்
”ஏய் லூசா நீ, வர்ற மகாலட்சுமியை இப்படி விரட்டியடிச்சா எப்படி, நான்தான் அந்த பொண்ணுங்களை எதுவும் செய்யலையே, அப்புறம் ஏன் கோபப்பபடற“
”ஒரு மணி நேரம் ரூம்ல என்ன செஞ்சிக்கிட்டு இருந்த”
”வந்ததும் குளிச்சேன், தூக்கம் வந்தது தரையில படுத்து தூங்கினேன் இப்ப என்னாச்சி யாருக்குமே சந்தேகம் வரலை தெரியுமா, நாம என்ன திட்டம் தீட்டினாலும் சரி அதுல தப்போ சந்தேகமோ வராத மாதிரி செய்யனும், அதான் புத்திசாலித்தனம் புரியுதா”
”சீ நீயெல்லாம் ஒரு மனுஷனா, ஒரு நிமிஷம் நான் பயந்துட்டேன், அந்தப் பொண்ணுங்களுக்கு மட்டும் உன்னால ஏதாவது ஆகியிருந்தா கொஞ்சமும் யோசிக்காம உன்னை கொன்னிருப்பேன்”
”அதான் ஒண்ணும் நடக்கலைல்ல கோபமா இருக்காத விடு”