(Reading time: 7 - 13 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 41 - சசிரேகா

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

தில்லையும் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றான்.

   

வண்டியை விட்டு இறங்கியதும்

   

”சித்தா” என குரல் கொடுக்க ஓடிவந்தான் சித்தன். தில்லையும் சித்தனுமாக ஆளுக்கொரு பெண்ணை தோளில் தூக்கி போட்டுக் கொண்டு தில்லையின் வீட்டை அடைந்தார்கள், பின்னாலேயே சம்யுக்தாவும் சென்றாள்.

   

வீட்டிற்குள்ளே இருந்த அறையில் அந்த பெண்களை படுக்கையில் படுக்க வைத்த சித்தனும் தில்லையும் 

   

”அண்ணா இப்ப என்ன செய்றது”

   

“நம்ம ஆளுங்களை எல்லாரையும் கூப்பிடு, குமாரை போட வேண்டிய நேரம் வந்துடுச்சி”

   

”அவனை இவ்வளவு நாள் விட்டதே பெரிசுண்ணா, எப்ப நம்ம ஏரியாலயே கை வைச்சானோ அவனை விடக்கூடாதுண்ணா, நான் இப்பவே போய் ஆளுங்களை ரெடி பண்றேன், சீக்கிரமா வாண்ணா”

   

”இதப்பாரு ஆளுங்களை ரெடி பண்ணிட்டு நீ வந்து இவங்களை பார்த்துக்க, சம்யுக்தாவை என்னால நம்ப முடியாது, அவள் இந்த ரெண்டு பொண்ணுங்களையும் அனுப்பிடுவா ஜாக்கிரதையா பார்த்துக்க”

   

”எப்படியிருந்தாலும் அவங்க உன்கூடதானே வருவாங்கண்ணா, அப்புறம் என்ன“

   

”அதுவும் சரிதான் நான் சம்யுக்தாவை பார்த்துக்கிறேன், நீ இந்த 2 பொண்ணுங்களையும் பார்த்துக்க சரியா“

   

”சரிங்கண்ணா நான் இப்பவே போய் ஆளுங்களை கூப்பிடறேன்” என சொல்லி அவன் வெளியே சென்றுவிட அவர்கள் இருவரும் பேசிக் கொண்டது சரியாக சம்யுக்தாவிற்கு புரியவில்லை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.