(Reading time: 7 - 13 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

ஆனாலும் ஏதோ தப்பு நடக்கப் போகிறது என்று மட்டும் புரிந்துக் கொண்டாள். அது என்னவென தெரிந்துக் கொள்ள காத்திருந்தாள்.

   

தில்லையோ அந்த 2 பெண்களையும் ஏற இறங்கப் பார்த்தான். பள்ளி சீருடையில் இருந்தார்கள் மயக்கத்தில் இருந்தார்கள். மெதுவாக தனது சட்டைப் பட்டனை கழட்டத் தொடங்கினான் தில்லை. அதைக் கண்ட சம்யுக்தாவிற்கு பக்கென்றது வேர்த்துக் கொட்டியது. அவளால் நடப்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது, உடனே அவனிடம் சென்றாள். அவனோ சட்டையை அவிழ்த்துவிட்டு அந்த 2 பெண்ணில் ஒரு பெண்ணின் முகத்தருகே சென்று அவளின் மயக்க நிலையை பரிசோதனை செய்ய அதற்குள் சம்யுக்தா அவனை பிடித்து வேறு பக்கம் தள்ளிவிட அவனோ தடுமாறி நின்றான்

   

”ஏய் என்னடி செய்ற” என திட்ட

   

”நீ இப்ப என்ன செய்யப் போறேன்னு எனக்கு புரிஞ்சிடுச்சி, நீயெல்லாம் மனுஷனா, பாவி, இந்த சின்ன பொண்ணுங்க வாழ்க்கையோட விளையாட எப்படி உனக்கு மனசு வந்துச்சி, அவங்ககிட்ட போய் தப்பா நடந்துக்கப் பார்க்கறியே”

   

”இதப்பாரு தேவையில்லாம வார்த்தையை விடாத, அவங்க மயக்கத்தில இருக்காங்க அதான் என்ன ஏதுன்னு பார்க்கப் போனேன்”

   

”பொய் சொல்லாத சட்டையை கழட்டினியே எதுக்கு அவங்ககிட்ட தப்பா நடந்துக்கதானே” என கேட்க அவனுக்கு கோபமே வந்தது, கோபத்துடன் தனது சட்டையை விசிறியடித்துவிட்டு அங்கிருந்த அலமாரியில் இருந்து வேறொரு சட்டையை அணிந்துக் கொண்டு வந்தான். அதற்குள் சித்தனும் வந்தான்

   

”அண்ணா எல்லாம் ரெடி”

   

”நீ பொண்ணுங்களை பார்த்துக்க, அவங்க எங்கயும் தப்பிச்சி போக கூடாது, ஒரு வேளை மயக்கம் தெளிஞ்சி எழுந்தா உடனே மயக்க மருந்து கொடுத்துடு, நான் வர்றவரைக்கும் அவங்க இங்கதான் இருக்கனும் சரியா”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.