குலுங்கினார்கள். சம்யுக்தாவிற்கு சிரமமாக இருந்தது
அவனிடம் பேசவும் பிடிக்கவில்லை, அதனால் அமைதி காத்தாள். அவன் ஜீப்பை முன்னால் செலுத்த திடீரென ஒருவன் தெரியாமல் அந்த ஜீப் முன்னால் மோதிவிட்டான். வண்டியையும் உடனே நிறுத்தினான் தில்லை. மோதியவன் எழுந்து நின்று பார்க்க அங்கு தில்லையிருக்கவும் அதிர்ந்தான். தில்லையோ சிரித்தான்
”வாடா குமாரு வா வா தானா வந்து மாட்டினியா, இன்னிக்கு நீ என் கையால செத்தடா” என கோபமாகச் சொல்ல அவன் ஓட ஆரம்பிக்க தில்லையும் வண்டியை ஓட்டியபடியே விரட்டினான்.
இதில் சம்யுக்தாவின் கையில் இருந்த தாலியோ தடுமாறி அவனின் கையில் விழவே அவனோ கோபத்தில் பொங்கினான்
”எங்க போனாலும் இந்த தாலியை வேற கொண்டு வந்துடு இம்சை”
”ப்ச் அதை கொடுங்க“
”முடியாது” என சொல்லியவன் உடனே அந்த தாலியை தன் பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டான்
”அப்படி செய்யாதீங்க அந்த தாலி என்னோடது கொடுங்க”
”முடியாதுடி பேசாம உட்காரு, நானே குமாரை பிடிக்கலாம்னு இருக்கேன் நீ ஒண்ணு“
“எனக்கு நியாயம் வழங்காம அதுக்குள்ள என் தாலியை எடுத்து வைச்சிக்கிட்டீங்களே இது அநியாயம்”
”ஆமா நான் அநியாயமாதான் நடந்துக்கிறேன், உன்னால ஆனதை செய் போ” என திட்ட அவளோ தனது தாலியை எடுக்க அவனிடம் நெருங்க அவனோ தடுத்தான்