(Reading time: 8 - 15 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 20 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

றுநாள் மாலையே சரண்யாவின் வீட்டிற்கு சென்றாள் மைத்ரேயி. இந்த முறை மறக்காமல் சரண்யாவின் மகளுக்கு அவளின் வயதிற்கு ஏற்ப சின்ன பொம்மை ஒன்றை வாங்கி சென்றாள்.

   

அவள் சென்ற நேரம் சுலோச்சனா அங்கே சரண்யாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

   

இருவரும் மைத்ரேயியை வரவேற்று உபசரிக்க, மைத்ரேயி வாங்கி வந்த பொம்மையை நிஷாவிடம் கொடுத்தாள்...

   

அந்த பிஞ்சுக் குழந்தையின் முகத்தில் வெளிப்படையாக தெரிந்த சந்தோஷம் மைத்ரேயியின் மனதை நெகிழ்த்தியது... 

   

எப்படியாவது சரண்யாவை அவர்கள் வீட்டில் வந்து தங்க சம்மதிக்க வைப்பது என்று முடிவு செய்துக் கொண்டாள்... அது சரண்யாவிற்கு மட்டுமல்லாமல், நிஷாவிற்கும் நன்மையை தரும் என்று அவளுக்கு தோன்றியது.

   

சரண்யாவின் ஜூரம் பற்றிய விசாரிப்புகள், காஃபி உபசரிப்பு என்று சிறிது நேரம் சென்றது...

   

மெல்ல தான் வந்த விஷயத்தை ஆரம்பித்தாள் மைத்ரேயி...

   

“இங்கே இருந்து ஆஃபிஸ் வர உனக்கு கஷ்டமா இருக்குமே சரண்யா... எப்படி மேனேஜ் செய்ற?”

   

சரண்யா பதில் சொல்வதற்கு முன் முந்திக் கொண்ட சுலோச்சனா,

   

“ஆமாம் தூரம் தான்! டைரக்ட் பஸ்சும் இல்லை... இரண்டு பஸ் இல்ல ஷேர் ஆட்டோ பிடிச்சு தான் தினமும் போயிட்டு வரா,” என்றாள்.

   

“நான் ஒரு ஐடியா சொல்லவா சரண்யா? என் வீடு ஆஃபிஸ் பக்கத்திலேயே இருக்கு... வாக்கபில் டிஸ்டன்ஸ்... வெல் கனக்டட் ஏரியா.... நீ வேற காலேஜ், கம்பெனிஸ்ன்னு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.