(Reading time: 8 - 15 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

“ம்ம்ம்... அது சரி தான் மேடம்... என் மேல பரிதாபப் பட்டு உதவி செய்யனும்னு நினைக்குறீங்க... எனக்கு புரியுது...”

   

“அப்படி இல்லை சரண்யா... தெரிஞ்ச ஒருத்தருக்கு உதவுறது சாதாரண விஷயம்.. எனக்கு உன்னை தெரியும்... என் கம்பெனில வேலை வேற செய்யுற... அப்புறம் நான் ஹெல்ப் செய்ய நினைக்க கூடாதா?”

   

“உங்க கம்பெனில எத்தனையோ பேர் வேலை செய்றாங்க... எல்லோருக்கும் இப்படி உங்களால ஹெல்ப் செய்ய முடியுமா மேடம்?” எந்த விதமான உணர்ச்சியையும் பிரதிபலிக்காத குரலில் மைத்ரேயியை மடக்கி விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் கேட்டாள் சரண்யா.

   

ஆனால், மைத்ரேயி அதற்கும் தயாராகவே இருந்தாள்!

   

“அது எனக்கு தெரியலை சரண்யா... ஆனால், என் கம்பெனில வேலை செய்றவங்க எல்லோரும் என் கிட்ட வந்து எனக்கு ஏதாவது ஒரு வேலை போட்டுக் கொடுங்கன்னு கேட்டு வேலைக்கு வந்தவங்க இல்லையே...”

   

இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காத சரண்யா அதிர்ந்துப் போய் மைத்ரேயியை பார்த்தாள்!

   

“நீ கேட்ட கேள்வி எனக்கும் அப்படி தான் இருந்தது சரண்யா! இங்கே பார், நாம எல்லோரும் மனுஷங்க... நீ படிச்சிருப்பீயே ஹுமன் பீயிங்க்ஸ் ஆர் சோஷியல் அனிமல்ஸ்... நம்மால தனியா வாழ முடியாது... ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி, விட்டுக் கொடுத்து தான் வாழனும்... நீ என் கிட்ட உதவி கேட்டப்போ நான் எப்படி உனக்கு நல்லதுன்னு யோசிச்சு செய்தேனோ, அதையே, இப்போ நீ கேட்காதப்போவும் செய்யனும்னு ஆசைப் படுறேன்... அதை ஏன் நீ பரிதாபப் படுறதா நினைக்குற?”

   

சரண்யாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை!

   

அது வரை அவர்கள் இருவரின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சுலோச்சனா,

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.