(Reading time: 7 - 13 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 27 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ரோஷனி சொன்ன விதம் ரேஷ்மியையும் காயப்படுத்தியது!

   

“சாரி, சாரி சித்தி... உங்க கிட்ட முதலேயே சொல்லி இருந்தா நீங்க அப்ளை செய்யவே விட்ருக்க மாட்டீங்க... அதனால தான் சொல்லலை... உலகத்துல பெரியவங்க மட்டும் இல்லை சின்ன, சின்ன குழந்தைங்க கூட கேன்சர்னால பாதிக்க படுறாங்க... இப்போதைய லேட்டஸ்ட் ஸ்டாட்ஸ் படி, கேன்சர்ன்னு கண்டுப்பிடிக்குற அஞ்சு குழந்தைங்கள்ல ஒரு குழந்தை கேன்சர்னால இறந்து போகுதாம்... கணக்குன்னு கேட்கும் போதே நமக்கு எப்படி இருக்கு... அந்த குடும்பத்துல இருக்குறவங்களை... அந்த குழந்தையை எல்லாம் நினைச்சுப் பாருங்க...”

   

ரேஷ்மி கெஞ்சுவதுப் போல சொன்னாள்... ஆனால் ரோஷனியால் இன்னமும் முழு அதிர்ச்சியில் இருந்து வெளி வர முடியவில்லை! அதை புரிந்துக் கொண்டவளாக, ஹேமா அவளின் உதவிக்கு வந்தாள்.

   

“நீ சொல்றது எல்லாம் சரி ரேஷு... அது எங்களுக்கும் புரியுது... உன் ஆசை நல்லது தான்... இல்லைன்னு நாங்க யாருமே சொல்லலை... அதை இங்கே, எங்க பக்கத்திலேயே இருந்து செய்யலாமேன்னு தான் உன் சித்தி சொல்றாங்க...”

   

“என்ன ஆன்ட்டி நீங்களும் எனக்கு சப்போர்ட் செய்ய மாட்டேங்குறீங்க,” என சிணுங்கிய ரேஷ்மி, மீண்டும் ரோஷனியை பார்த்து, “சித்தி, இப்போ எனக்கு கல்யாணம் நடந்தா சந்தோஷமா அமெரிக்காக்கு அனுப்பி வைக்க மாட்டீங்களா?” என்றாள்!

   

“அனுப்புவேன் ரேஷூ... உன்னை பார்த்துக்க பக்கத்திலேயே ஒருத்தன் இருக்காங்குற நம்பிக்கையில அனுப்பி வைப்பேன்,” என்றாள் ரோஷனி!

   

யோசிக்க ஒரு வினாடியும் எடுத்துக் கொள்ளாது, “சரி, அதையே இப்போவும் செய்ங்க... கல்யாணம் செய்து அனுப்பி வைங்க,” என்றாள் ரேஷ்மி!

   

ரோஷனி இப்போது ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போனாள்!!!!! ஹேமாவிற்கும் ஆச்சர்யம் தான்!

   

“நீங்களா பேச்சை ஆரம்பிப்பீங்கன்னு ரேஷூவும் ரொம்ப நாளா காத்திருந்திருப்பா 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.