(Reading time: 7 - 13 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

போலிருக்கே,” என்று ராகவி பக்கத்தில் இருந்த தன் அண்ணனை கேலியாக பார்த்தபடி சொல்ல, ஷ்யாம் அவளை பார்த்து முறைத்தான்!

   

“என்னை பார்த்து ஏண்டா முறைக்குற??? இதுக்கு மேல ஒரு பொண்ணு ஸ்டேஜ் போட்டு கொடுக்க முடியுமா? இப்போவாவது வாயை திறந்து பேசி தொலையேன்,” என அண்ணனுக்கு மட்டும் கேட்குமாறு ராகவி கிசிகிசுத்தாள்.

   

அதற்குள் மெல்ல சுதாரித்திருந்த ரோஷனி,

   

“சரி, நீ சொல்ற மாதிரியே செய்யலாம் ரேஷ்மி... கல்யாணம் உடனேயா செய்ய முடியும்... அதுக்கு அரேன்ஜ் செய்ய கொஞ்சமாவது டைம் வேணுமே... அது வரைக்கும் நீ இங்கேயே இரு,” என்றாள்.

   

“அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை சித்தி... ஷ்யாம் விட நல்ல பையனை நீங்க கண்டுபிடிக்க முடியுமா?? பேசாம அவனை எனக்கு கல்யாணம் செய்து வச்சிருங்க... அவனுக்கு ஈசியா யூ.எஸ்ல வேலை கிடைக்கும்... நாங்க இரண்டு பேருமா ஒன்னாவே யூஎஸ் போறோம்... ப்ராப்ளம் சால்வ்ட்...”

   

அப்படி போடு என் செல்லக்குட்டி, என்று ரேஷ்மிக்கு பார்வையால் பாராட்டு பகிர்ந்தாள் ராகவி!!!

   

ஆனால் ரேஷ்மி சொன்னதைக் கேட்டு திகைத்துப் போன பெரியவர்கள் இருவரும் ஷ்யாம் பக்கம் திரும்பி பார்க்க, அவன் திரு திருவென விழித்தான்...!

   

முதலில் தன்னிலைப் பெற்ற ஹேமாவிற்கு ஷ்யாமின் முகத்தை பார்த்து சிரிப்பு தான் வந்தது.

   

ரேஷ்மி சொன்னது ஹேமாவின் மனதிலும் இருக்கும் ஆசை தான்.

   

‘ஷ்யாம் விட நல்ல பையனை நீங்க கண்டுபிடிக்க முடியுமா??’ என ரேஷ்மி கேட்டதன் எஃபெக்ட்டில் மகனை வாஞ்சையுடன் பார்த்தவளுக்கு ஒரு விஷயம் புரிந்தது. 

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.