(Reading time: 6 - 11 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 43 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ரேவதி கேட்ட கேள்வியில் மற்றவர்கள் திகைத்து நின்றார்கள் என்றால், நந்திதாவினுள் திகைப்புடன் சுனாமியாக எண்ணங்களும் ஓடிக் கொண்டிருந்தன!

   

அந்த கேள்வி அவளின் வாழ்க்கையையே புரட்டி போடக் கூடியதல்லவா...!

   

என்ன பதில் சொல்வது... எப்படி சொல்வதென்று தான் அவளுக்கு புரியவில்லை....!

   

“இல்... இல்ல....” என்று அவள் தடுமாற, திகைப்பில் இருந்து வெளி வந்திருந்த காமாட்சி சத்தமாக இருமினாள்.

   

காமாட்சி எதிர்பார்த்ததுப் போலவே துளசி அவளின் பக்கம் பார்த்தாள்.

   

கண்களால் நந்திதாவை சுட்டிக் காட்டி மருமகளிடம் செய்தி சொன்னாள் காமாட்சி.

      

புரிந்துக் கொண்டதன் அறிகுறியாக தலை அசைத்த துளசி, நந்திதாவின் அருகே சென்று பரிவுடன் அவளின் கையை பற்றிக் கொண்டாள். பின் ரேவதியைப் பார்த்து,

   

“நல்ல கேள்வி கேட்டீங்க அத்தை... நந்து என்ன சொல்லுவா, சரின்னு தான் சொல்லுவா... நீங்களா விரும்பி வந்து அவக் கிட்ட கேட்கும் போது வேற என்ன சொல்லுவா... உதயை கல்யாணம் செய்துக்க அவ கொடுத்து வச்சிருக்கனுமே,” என்றாள் உற்சாகத்துடன்!

   

நந்திதா துளசியை திரும்பி பார்த்தாள்... துளசி அதைக் கண்டுக் கொள்ளாமல் ரேவதியிடமே பேசினாள்.

   

“நந்துவும் கூட ரொம்ப நல்ல பொண்ணு அத்தை... தேவைக்கு அதிகமா பேச மாட்டா... நல்ல மரியாதை தெரிஞ்சவ... உதய்க்கு எல்லா விதத்திலும் சரியான மேட்ச்சா இருப்பா!”

   

ரேவதி துளசி சொல்வதை முழுவதுமாக கேட்டு விட்டு, நந்திதாவை ஒரு பார்வை பார்த்தாள்...! ஆனால் நந்திதாவிடம் எதுவும் சொல்லாமல் காமாட்சி பக்கம் பார்த்து,

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.