(Reading time: 7 - 14 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 42 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ந்திதாவின் கோபப் பார்வையை கவனித்த உதய், “நான் இப்படி கோர் வேலை செய்து ரொம்ப நாள் ஆச்சுங்க நந்திதா... நான் கொஞ்சம் ஸ்லோவா தான் பிக்கப் ஆவேன்... ஸோ அட்ஜஸ்ட் செய்து சொல்லுங்க,” என்றான் ஈஸியாக!

   

சர்க்யூட் பக்கம் பார்வையை திருப்பிக் கொண்ட நந்திதா, “கம்பெனி நோட்டிஸ் பீரியட் ஒரு மாசம்... அதுக்கு மேல எல்லாம் என்னால இருக்க முடியாது... வேணும்னா நான் டாகுமென்ட் ப்ரிபேர் செய்து தரேன்... யூஸ் செய்துக்கோங்க,” என்றாள் கறாராக!

   

“சரிங்க நந்திதா மேடம்... ஆனால்... உங்களுக்கு இந்த வேலை பிடிக்கும்ன்னு நினைச்சேன்...”

   

“திரும்ப அந்த டாபிக் வேண்டாம்!”

   

“இருங்க இருங்க அவசர படாம நான் சொல்றதை கேளுங்க.... நேத்து நான் உங்க கிட்ட என்ன சொன்னேன்... ஒரு பர்சனல் விஷயம், ஒரு அஃபிஷியல் விஷயம் பேசனும்னு சொன்னேன்... பர்சனல் விஷயத்தை கேட்ட நீங்க, அஃபிஷியல் விஷயம் என்னன்னு கூட கேட்கலையே...”

   

நினைவு வந்தவளாக விழிகளை விரித்த நந்திதா, “ஓ...! என்னது அது?” என்றாள் ஆர்வத்துடன்!

   

அவளிடம் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்து புன்னகை புரிந்த உதய், “இப்போவாவது கேட்டீங்களே... இருங்க என்னன்னு சொல்றதை விட எடுத்து என்னன்னு காட்டுறேன்,” என்று சொல்லிக் கொண்டே மேஜை மீதிருந்த தன் லேப்டாப்பை கையில் எடுத்தான். 

   

அதில் ஒரு ஈமெயிலை ஓபன் செய்து, லேப்டாப்பை நந்திதாவின் முன் வைத்து, “படிங்க,” என்றான்!

   

என்ன என்ற கேள்வியுடன் ஈமெயிலை படித்த நந்திதா நம்ப முடியாமல் ‘ஆ’ என்று வாயை பிளந்தாள்....!

   

அவள் உருவாக்கி இருந்த அந்த ரோபோவிற்கு காப்புரிமை (patent) பதிவு செய்யும் அப்ளிகேஷன் அது...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.