(Reading time: 7 - 14 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

“ஓகே ஆன்ட்டி... இதோ வரேன்...”

   

காமாட்சி மீண்டும் ரேவதியை பார்த்தாள்! இப்போது ப்ரியாவும் ரேவதியின் அருகே வந்து நின்றுக் கொண்டிருந்தாள்! அவர்கள் இருவரும் இன்னமும் நின்றுக் கொண்டு இருப்பது புரியவும், “ரெண்டுப் பேரும் உட்காருங்க... அப்புறம்... ரேவதி, என்ன விஷயம்?” என மீண்டும் கேட்டாள் காமாட்சி!

   

காமாட்சியின் சொல்லை மதித்து அங்கிருந்த அலங்கார ஷோஃபாவில் அமர்ந்த ரேவதி, “அவ வரட்டும் இருங்க அக்கா,” என்று மட்டும் சொன்னாள்! ப்ரியாவும் ரேவதியின் பக்கத்தில் இருந்த குஷன் சேரில் அமர்ந்தாள்!

   

காமாட்சிக்கு என்ன என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் அதிகமானது! ஆனால் ரேவதியாக சொல்லட்டும் என முடிவு செய்து பொறுமையை இழுத்துப் பிடித்தாள்!

   

ஒரு சில நிமிடங்களில் மாடியில் இருந்து நந்திதாவும் துளசியும் ஒன்றாகவே வந்தார்கள்! அங்கே இருந்த ரேவதியை பார்த்து இருவரின் முகமும் மாறியது! நந்திதா யோசனையுடன் முகத்தை சுருக்க, துளசி ஆச்சர்யத்துடன் பார்த்தாள்!

   

இப்போது என்ன என்ற கேள்வி ரேவதியை தவிர அங்கே இருந்த அனைவருக்குள்ளேயுமே இருந்தது!

   

நந்திதா, துளசி இருவரும் காமாட்சியின் அருகே வந்து நிற்க, அதற்காகவே காத்திருந்தவளாக நேராக நந்திதாவிடம் பேசினாள் ரேவதி.

   

“நந்திதா... என் மகன் உதய்க்கு உன்னை கல்யாணம் செய்து வைக்க ஆசைப் படுறேன்... உனக்கு சம்மதமா????”

   

நந்திதா தன் காதில் சரியாக தான் விழுந்ததா என்று நம்ப முடியாமல் விழித்தாள்...!

   

காமாட்சியும் திகைத்து தான் போனாள்! எதற்கும் அசையாத ப்ரியாவும் கூட வாயடைத்து 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.