✽✽✽
ரேவதி தீவிரமான யோசனையில் ஆழ்ந்துப் போயிருந்தாள்...!
“ஏன் ஆன்ட்டி ஒரு மாதிரி இருக்கீங்க?”
ரேவதியை பற்றி தெரியும் என்பதால் தயக்கத்துடன் தான் அதை கேட்டாள் ப்ரியா.
அவள் எதிர்பார்த்தது போலவே எரிந்து விழுந்தாள் ரேவதி!
“ப்ரியா! நீ உன் வேலையை மட்டும் செய், அது போதும்!“
“சாரி ஆன்ட்டி...”
எப்போதும் போல முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் பேசிய ப்ரியாவை பார்த்து ரேவதிக்கே பாவமாக இருந்தது...
கொஞ்சம் பொறுமையாக அவளிடம் பதில் சொல்லி இருந்திருக்கலாம்!
“ப்ரியா, நான் மாம்பலம் போறேன்... நீயும் வாயேன்...”
சற்று முன் கோபமாக பேசிய ரேவதி, உடனே தண்மையாக பேசியதும் ப்ரியாவிடம் எந்த மாற்றத்தையும் கொடுத்ததாக தெரியவில்லை!
“சரி ஆன்ட்டி போகலாம்,” என்றாள் அமைதியாக.
இருவரும் கிளம்பி வரவும், டிரைவர் பணிவுடன் ஓடி வந்தான்.
“முருகா, மாம்பலம் போகனும்... காரை எடு,” என்றாள் ரேவதி.